சுக்கு மல்லி காபி! (வேர்க்கொம்பு மல்லி கோப்பி)
தேவையான பொருட்கள்:
சுக்கு மல்லி காபி பொடி / தூள்:
- 150 கிராம் மல்லி (-/+)
- 50 கிராம் சுக்கு / வேர்க்கொம்பு (-/+)
- 25 கிராம் மிளகு (-/+)
- 25 கிராம் சின்னச்சீரகம் (-/+)
சுக்கு மல்லி காபி :
- 250 மி.லீ தண்ணீர் (-/+)
- 1/2 மே.க சுக்கு மல்லி காபி பொடி (-/+)
- பனங்கற்கண்டு / சீனி( சர்க்கரை) / கற்கண்டு (-/+)
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில், எண்ணை சேர்க்காமல், மல்லியை மிதமான வெப்பத்தில் வறுக்கவும். மல்லியின் வாசம் வரும் பொழுது, மிளகைச் சேர்த்து வறுக்கவும். இறக்குவதற்க்கு ஒரு சில நிமிடங்கள் முன்பாக சின்னச்சீரகம் சேர்த்து வறுத்து, இறக்கி ஆற விடவும். முழு சுக்கு / வேர்க்கொம்பு சேர்ப்பதென்றால், தட்டி சின்னச்சீரகத்துடன் சேர்த்து வறுத்து இறக்கி ஆற விடவும்.
- வறுத்து வைத்த பொருட்களை மிக்சி ஜாரில் போட்டு மைதாக அரைக்கவும். அதனுடன் சுக்கு / வேர்க்கொம்பு தூளைச் சேர்த்து அரைத்து எடுக்கவும். இதனை காற்று புகாத போத்தலில் போட்டு மூடி பாதுகாக்கலாம்.
- ஒரு பாத்திரத்தில் 250 மி.லீ தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் 1/2 மே.க சுக்கு மல்லி காபி பொடியை சேர்த்து 3-5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.
- அதில் உங்கள் சுவைக்கேற்ப பனங்கற்கண்டு / சீனி( சர்க்கரை) / கற்கண்டு சேர்த்து, கரைந்ததும், அதனை இறக்கி வடிகட்டினால், சுக்கு மல்லி காபி தயார்!
Comments
Post a Comment