மாம்பழ ஐஸ்கிறீம்!



தேவையான பொருட்கள்:
  • 2 கப் ப்றஸ் கிறீம்
  • 1 கப் மில்க் மெய்ட் / ரின்பால் 
  • 1 கப் மாம்பழகூழ் / 1 மாம்பழம்

செய்முறை:
  1. மாம்பழத்தை கூழாக அடித்து வைக்கவும்.
  2. ப்றஸ் கிறீமை இறுக ஆரம்பிக்கும் வரை, கேக் அடிக்கும் கருவியால் ஒரே பக்கமாக நன்றாக அடித்துக் கொள்ளவும்.
  3. அதன் பின்பு மில்க் மெய்ட் / ரின்பாலைச் சேர்த்து 1 நிமிடம் அடித்துக் கொள்ளவும்.
  4. ஒரு மூடி உள்ள பெட்டியில் ப்றஸ் கிறீம் கலவையை விட்டு, அதன் பின்பு மாம்பழகூழ் சேர்த்து நன்றாக்க் கலக்கவும். விரும்பினால் சிறிது மாம்பழகூழ் கொண்டு அலங்கரிக்கவும்.
  5. அதனை மூடி ஃப்ரீஸரில் வைக்கவும். குறைந்து 6 மணி நேரம் அல்லது ஒரு இரவு முழுவதும் வைத்து எடுத்தால் நன்று.
  6. எளிதாகச் செய்யக் கூடிய சுவையான மாம்பழ ஐஸ்கிறீம் தயார்!




Comments