மஸ்கட்!




தேவையான பொருட்கள்:
  • 1 சுண்டு கோதுமை மா
  • 1 ½ சுண்டு சீனி (-/+)
  • 100 மி.லீ நெய் (-/+)
  • 35 கிராம் கஜூ (-/+)
  • ½ தே.க ஏலக்காய்த்தூள் (-/+)
  • கலரிங்
  • தண்ணீர்

செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தில் கோதுமை மா மற்றும் தண்ணீர் சேர்த்து, பூரி மா பதத்திற்கு குழைக்கவும். அந்த மாக்கலவை மூழ்கின்ற அளவு தண்ணீர் விட்டு, குறைந்தது 30 நிமிங்கள் ஊற விடவும். 
  2. அதன் பின்பு நன்றாக பிசைந்து பால் எடுக்கவும். மாக்கலவையிலிருந்து பால் வெளிவந்ததும், இறப்பர் மாதிரி மாவில் இருந்து வரும் கலவையில் சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து, அதை வீசி விடவும். எடுத்த பாலை வடிகட்டி விடவும். குறைந்தது 5 மணித்தியாலங்கள் அல்லது ஒரு இரவு முழுவதும் பாலை படிய விடவும்.
  3. மறு நாள் கோதுமைப்பால் கீழேயும் தெளிந்த நீர் மேலேயும் இருக்கும். மேலே உள்ள நீரை ஊற்றி விடவும்.
  4. ஒரு அடி கனமான பாத்திரத்தில் 1 ½ சுண்டு சீனி மற்றும் ¾ சுண்டு தண்ணீரைச் சேர்த்து சீனிப்பாணி காய்ச்சவும். ஒரு கம்பிப் பதம் வந்ததும், கோதுமைப்பாலை நன்றாகக் கலக்கி, சீனிப்பாணியினுள் விட்டுக்கொண்டு கை விடாமல் கிண்டவும்.
  5. மாக்கலவை இறுகி வரும் போது, கலரிங் சேர்த்துக் கிண்டவும். அடுத்ததாக ½ பங்கு நெய்யை சிறிது சிறிதாக விட்டுக் கிண்டவும் (ஒரு தரம் விட்ட நெய் நன்றாகக் கலந்த பின்பே அடுத்த தரம் நெய்யை விட வேண்டும்). 30 நிமிடங்களின் பின்பு கஜூவை சேர்த்து கிண்டவும், அடுத்து மீதி இருக்கும் நெய்யையும் சிறிது சிறிதாக விட்டுக் கிண்டவும் (ஒரு தரம் விட்ட நெய் நன்றாகக் கலந்த பின்பே அடுத்த தரம் நெய்யை விட வேண்டும்).
  6. அடுத்ததாக ஏலக்காய்த்தூள் சேர்த்துக் கிண்டவும் ( கஜூ சேர்க்கும் போதும் ஏலக்காய்த்தூள் சேர்க்கலாம்). 45 நிமிடங்களின் பின்பு விட்ட நெய் வெளியேறும், அத்துடன் மாக்கலவை நெய்யில் பொரிகிற மாதிரி வரும். கரண்டியால் தூக்கி விடும் போது மஸ்கட் முறிந்து விழும், அது தான் சரியான பதம். 
  7. நெய் பூசிய தட்டில் விட்டு, நன்றாக அழுத்தி சமப்படுத்தி விடவும். ஆறியதும் துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.

சுவையான மஸ்கட் தயார்!

குறிப்பு
  • விரும்பினால் 1 பங்கு மாவிற்கு 2 பங்கு சீனி உபயோகிக்கலாம்.
  • ஏலக்காய்த்தூளுக்கு பதிலாக ரோஸ் எசன்ஸ் உபயோகிக்கலாம்.
  • கஜூ கூடுதலாக விரும்புகின்றவர்கள் 50 கிராம் கஜூ சேர்க்கவும்.






 





 

Comments

Popular Posts