புழுக்கொடியல் மா பிரட்டல்!

 




தேவையான பொருட்கள்:

  • 1 கப் புழுக்கொடியல் மா 
  • ¾ கப் சீனி
  • ½ தேங்காய்ப்பூ
  • இளநீர் / தண்ணீர்
  • 1 சிட்டிகை உப்பு


செய்முறை:

  1. புழுக்கொடியல் மாவை அரித்து வைக்கவும். தேங்காயை உடைத்து, இளநீரை குழைப்பதற்கு எடுத்து வைக்கவும். தேங்காயை திருவி வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் புழுக்கொடியல் மா, சீனி, உப்பு மற்றும் ¼ கப் தேங்காய்ப்பூ ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து கலக்கவும் (விரும்பினால் முழு தேங்காய்ப்பூவையும் சேர்க்கலாம்). அதில் இளநீர் / தண்ணீர் தெளித்து குழைக்கவும், அதனுடன் மீதி தேங்காய்ப்பூவைச் சேர்த்து கலந்து விடவும். 
  3. புழுக்கொடியல் மா கலவையை உருண்டைகளாக பிடித்தோ அல்லது மாவாகவோ, விரும்பினால் சிறிது தேங்காய்ப்பூ தூவி பரிமாறவும்.

சுவையான புழுக்கொடியல் மா பிரட்டல் தயார்!










                             




Comments

Popular Posts