தட்டைவடை / முத்துவடை / பருத்தித்துறை வடை!
தேவையான பொருட்கள்:
- 1 கிலோ உளுந்து
- 1 ½ கப் அவித்த மா
- 4 மே.க மிளகாய்த்தூள்
- 2 ½ மே.க பெருஞ்சீரகம்
- 250 கிராம் வெங்காயம்
- கறிவேப்பிலை
- உப்பு
- எண்ணெய்
செய்முறை :
- உளுந்தைக் கழுவி 3 மணித்தியாளங்கள் ஊற வைக்கவும். உளுந்து ஊறியதும், வார விடவும்.
- வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் ¾ பங்கு உளுந்தைப் போடவும். மீதி ¼ பங்கு உளுந்தை மிக்சியில் தண்ணீர் சேர்க்காமல் அரைத்தெடுக்கவும் அல்லது உரலில் துவைக்கவும்.
- பாத்திரத்தில் உள்ள உளுந்துடன் அரைத்த / துவைத்த உளுந்து, பெருஞ்சீரகம், உப்பு, மிளகாய்த்தூள், வெட்டி வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து, நன்றாக குழைக்கவும்.
- அத்துடன் அவித்த கோதுமை மாவை சிறிது சிறிதாகச் சேர்த்து, நன்றாகக் குழைக்கவும். குழைத்த மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணை விட்டு, மிதமான வெப்பத்தில் சூடேற்றும்.
- ஒரு ரின்பால் பேணியின் அடிப் பக்கத்தில் ஒரு பிளாஸ்டிக் பேப்பர் விரிக்கவும். அதன் மேல் வடை மா உருண்டையை வைக்கவும். கையை தண்ணீரில் நனைத்து, ஈரக் கையால் வடை மாவை அழுத்தி /தட்டி வட்டமாக்கி (மெல்லியதாக), சூடான எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும். அதே மாதிரி ஒவ்வொரு வடையாக தட்டிப் போட்டு, பொன்னிறமாக பிரித்தெடுக்கவும்.
- பொரித்த வடையை வடியில் போட்டு எண்ணை வார விட்டு எடுக்கவும். இந்த அளவில் செய்ய அண்ணளவாக 175 வடை கிடைக்கும்.
தட்டை வடை / முத்து வடை தயார்!
குறிப்பு:
- தட்டை வடை / முத்து வடையில் உளுந்து குறைவாக வேண்டும் என்றால், மேலதிகமாக ½ கப் அவித்த கோதுமை மா சேர்க்கவும்.
- உங்களின் சுவைக்க ஏற்ப மிளகாய்த்தூள், பெருஞ்சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் மாவின் அளவை கூட்டிக் குறைக்கவும்.
Comments
Post a Comment