பிரௌனி (முட்ட சேர்க்காதது / சைவ பிரௌனி)
தேவையான பொருட்கள்:
- 1 கப் சீனி
- ¾ கப் தயிர்
- ¾ கப் எண்ணை
- ¾ கப் மா
- ½ கப் கொக்கோ
- ¼ தே.க பேக்கிங்பவுடர்
- 1 தே.க வனிலா பவுடர்
- 1 சிட்டிகை உப்பு
- சொக்லேட் துண்டுகள்
செய்முறை:
- ஒவனை 180 °C ல் சூடேற்றவும்.
- ஒரு பாத்திரத்தில் தயிர் மற்றும் சீனியை நன்றாக கலக்கவும், அதனுடன் எண்ணை சேர்த்துக் கலக்கவும்.
- மா, கொக்கோ, பேக்கிங்பவுடர், வனிலா பவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, தயிர் கலவையினுள் அரித்து, கலவையுடன் சேர்த்து கலக்கவும்.
- பேக்கிங்தட்டில் (29 x 15 செ.மீ) பேக்கிங்பேப்பர் விரித்து, அதன்மேல் பிரௌனி கலவையை ஊற்றி சமப்படுத்தவும். விரும்பினால் சொக்லேட் துண்டுகள் தூவி, 20 - 25 நிமிடங்கள் வேக விடவும்.
சுவையான பிரௌனி தயார்!!
குறிப்பு:
- இந்த பிரௌனி கலவை 8 இஞ் X 8 இஞ் பேக்கிங்தட்டுக்கு போதுமானது.
- பேக்கிங்பேப்பர் இல்லையென்றால், பேக்கிங்தட்டுக்கு எண்ணை பூசி மா அல்லது கொக்கோ தூவியும் பிரௌனி கலவையை விடலாம்.
- விரும்பினால் ஒறியோ பிஸ்கட் அல்லது பதாம் பருப்பு தூவியும் பிரௌனி செய்யலாம்.
- விரும்பினால் ஐசிங்சுகர் தூவியும் அல்லது சொக்லேட் கினாஸால் அலங்கரித்தும் பரிமாறலாம்.
Comments
Post a Comment