முருங்கைக்காய் பிரட்டல்





தேவையான பொருட்கள்:

  • 3 முருங்கைக்காய்
  • 1 வெங்காயம்
  • தண்ணீர் / இளநீர்
  • உப்பு


அரைக்க / இடிக்க: 

  • ½ கப் தேங்காய்ப்பூ
  • 7 செத்தல் மிளகாய்
  • தண்ணீர் / இளநீர்
  • ½ கப் சின்ன வெங்காயம்
  • ½ மே.க பெருஞ்சீரகம் 


தாளிக்க:

  • எண்ணை
  • கடுகு 
  • பெருஞ்சீரகம்/ சின்னச்சீரகம்
  • வெங்காயம்
  • செத்தல்
  • கறிவேப்பிலை 


செய்முறை:

  1. செத்தல் மிளகாயை ஊறவைத்து, அதன்பின்பு தேங்காய்ப்பூவுடன் சேர்த்து அரைத்து வைக்கவும். வெங்காயம் மற்றும் பெருஞ்சீரகத்தை, ஒன்றை பாதியாக இடித்து வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் முருங்கைக்காய், வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து, முருங்கைக்காய் அவிய தேவையான அளவு தண்ணீர் /இளநீர் சேர்த்துக் கலந்து மூடி அவிய விடவும்.
  3. முருங்கைக்காய் அவிந்ததும், அரைத்த தேங்காய்ப்பூக் கலவை மற்றும் தட்டி வைத்த வெங்காயம் சேர்த்து கலந்து கொதிக்க விடவும். கொதி வந்ததும் முருங்கைக்காய் பிரட்டலை வேறு ஒரு பாத்திரத்திற்க்கு மாற்றவும்.
  4. முருங்கைக்காய் பிரட்டல் வைத்த அதே பாத்திரத்தில் எண்ணை விட்டு மிதமான வெப்பத்தில் சூடேற்றவும். அதில் கடுகைப்  போடவும். கடுகு வெடிக்கத் தொடங்கும் போது அதனுடன் பெருஞ்சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் செத்தல் மிளகாய் சேர்த்து தாளிக்கவும். வெங்காயம் பொன்னிறமாகும் போது முருங்கைக்காய் பிரட்டலை சேர்த்துக் கலந்துவிடவும்.


சுவையான முருங்கைக்காய் பிரட்டல் தயார்!


குறிப்பு:

  • உங்கள் சுவைக்க ஏற்ப்பட பொருட்களின் அளவுகளை கூட்டிக்குறைக்கவும். 
  • அம்மியில் தேங்காய்ப்பூ அரைப்பதென்றால், தேங்காய்ப்பூ மற்றும் செத்தல் மிளகாய் அரைக்கும் போது கடைசியாக, வெங்காயம் மற்றும் பெருஞ்சீரகத்தை சேர்த்து, ஒன்று பாதியாக தட்டி வைக்கவும்.
 
 














































Comments