கருணை கிழங்கு குழம்பு



தேவையான பொருட்கள்:

  • ¾ கிலோ கருணை கிழங்கு
  • ¼ கிலோ வெங்காயம்
  • 5 பல் உள்ளி
  • 3 மே.க குழம்பு மிளகாய்த்தூள் / கறித்தூள்
  • ½ தே.க வெந்தயம்
  • புளி
  • உப்பு
  • தண்ணீர்
  • தேங்காய்ப்பால்


தாளிக்க:

  • 1 தே.க கடுகு
  • 1 தே.க பெருஞ்சீரகம்
  • வெங்காயம்
  • கறிவேப்பிலை
  • செத்தல் மிளகாய் 
  • எண்ணை


செய்முறை:

  1. உள்ளி மற்றும் வெங்காயத்தை மெல்லிய துண்டகளாக கொள்ளவும். புளியை சிறிதளவு தண்ணீரில் கரைத்து வைத்துக் கொள்ளவும். கருணை கிழங்கை விரும்பிய வடிவில் வெட்டி, எண்ணெயில் பொரித்து, வடியில் வார வைக்கவும்.
  2. அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சிறிது எண்ணை ஊற்றி சூடானதும் வெந்தயம், வெங்காயம் மற்றும் உள்ளி போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், குழம்பு மிளகாய் தூள் போட்டுக் கலந்து, புளிக் கரைசல், உப்பு, தண்ணீர் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்க விடவும்.
  3. நன்கு கொதித்து வந்த பின்பு, பொரித்து வைத்துள்ள கருணை கிழங்கை அதில் சேர்க்கவும். உப்பு சுவை பார்த்து, மிதமான வெப்பத்தில் எண்ணை வெளிவரும் வரை குழம்பை வத்த விடவும்.
  4. ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணை ஊற்றி சூடானதும், அதில் கடுகைப் போடவும், கடுகு வெடிக்கும் போது அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை, பெருஞ்சீரகம் மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறும் பொழுது, தாளிதத்தை கருணை கிழங்கு குழம்பில் ஊற்றிக் கலந்துவிடவும். கருணை கிழங்கு குழம்பை சுடச் சுட பரிமாற சுவையாக இருக்கும்.

கருணை கிழங்கு குழம்பு தயார்!









Comments