முரல் மீன் குழம்பு





 


தேவையான பொருட்கள்:

  • 2 பெரிய முரல் மீன்
  • 1 பெரிய வெங்காயம்
  • 6 பல் உள்ளி
  • ½ தே.க கடுகு
  • 1 தே.க பெருஞ்சீரகம்  
  • ½ தே.க சின்னச்சீரகம்
  • ½ தே.க வெந்தயம்
  • ¼ கப் கறித்தூள் /இந்தியன் கறித்தூள்
  • ½ கப் தேங்காய்ப்பால்
  • 2 தே.க மிளகு  
  • உப்பு
  • கறிவேப்பிலை
  • எண்ணை
  • தண்ணீர்
  • புளி


செய்முறை

  1. ஒரு தாச்சியில் எண்ணையை விட்டு மிதமான வெப்பத்தில் சூடாக்கவும். அதில் கடுகைப் போடவும். கடுகு பொரிந்து வெடிக்கும் பொழுது, சின்னச்சீரகம், வெந்தயம், வெங்காயம் மற்றும் கருவேப்பிலையைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கி கலர் மாறும் போது, கறித்தூள், மஞ்சள்தூள், புளிக்கரைசல் மற்றும் தண்ணீர் விட்டுக் கலந்து, உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தூள் பச்சை வாசனை போனதும், இடித்த உள்ளி, மீன் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து, மூடி அவிய விடவும். அதன் பின்பு கறிவேப்பிலை பிய்த்துப் போட்டு, மிளகு மற்றும் பெருஞ்சீரகத்தை ஒன்று பாதியாக இடித்து சேர்க்கவும். ஒரு கொதி வர அடுப்பை அணைக்கவும்.
  2. சுடச் சுட சோற்றுடன் / புட்டுடன் சேர்த்து பரிமாற சுவையாக இருக்கும்.


முரல் மீன்  குழம்பு தயார்!!!


குறிப்பு:

  • உங்கள் சுவைக்கேற்ப பொருட்களின் அளவுகளை கூட்டுக் குறைக்கவும்.
  • மீன் கறிகளுக்கும் மற்றும் சொதிகளுக்கும் கடைசியாக பெருஞ்சீரகம் தட்டிப் போட்டால் நல்ல வாசமாகவும், சுவையாகவும் இருக்கும்.









Comments