இறால் சொதி



தேவையான பொருட்கள்:

  • 10 இறால்
  • 100 கிராம் மாங்காய்
  • 50 கிராம் வெங்காயம்
  • 5 பச்சைமிளகாய்
  • ½ தே.க மஞ்சள்தூள்
  • 1 தே.க பெருஞ்சீரகம் 
  • 1 கப் தேங்காய்ப்பால் 
  • 3 கப் தண்ணீர் 
  • உப்பு
  • கறிவேப்பிலை


செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தில் மாங்காய், வெங்காயம், பச்சைமிளகாய், மஞ்சள், உப்பு மற்றும் இறால் ஆகியவற்றை சேர்த்து, இவை அனைத்தும் மூழ்கிற அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அவிய விடவும்.
  2. மாங்காய் துண்டுகள் அவிந்ததும் தேங்காய்ப்பால், கறிவேப்பிலை மற்றும் பெருஞ்சீரகத்தை ஒன்று பாதியாக இடித்து சேர்த்துக் கலந்து விடவும். சொதி கொதித்து பொங்கி வரும் போது அடுப்பிலிருந்து இறக்கவும். 


இறால்சொதி தயார்!!!


குறிப்பு: 

  • பொருட்களின் அளவை உங்கள் சுவைக்கேற்ப்ப கூட்டிக் குறைக்கவும்.
  • இந்த சொதிக்கு ரின் தேங்காய்ப்பால் உபயோகித்தேன்.
  • எல்லா வகை சொதிகளுக்கும் மற்றும் மீன் கறிகளுக்கும், அடுப்பிலிருந்து இறக்கும் முன்பு பெருஞ்சீரகத்தை ஒன்று பாதியாக தட்டி அல்லது கசக்கிப் போட்டால் கறி / சொதி நல்ல வாசகமாக இருக்கும்.










Comments