அவல் பாயாசம்
தேவையான பொருட்கள்:
- 1 கப் அவல்
- ½ கப். சீனி
- 4 கப் பால்
- ½ தே.க ஏலக்காய்த்தூள்
- ¼ கப் தேங்காய் சீவல் / சொட்டு
- கயூ
- நெய்
- 1 சிட்டிகை உப்பு
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி, முதலில் தேங்காய் சீவல் / சொட்டுகளை பொன்னிறமாக பொரித்து, தனியே எடுத்து வைக்கவும். அதே நெய்யில் கயூ மற்றும் அவலை போட்டு வறுக்கவும்.
- அதன் பின்பு அவலுடன் பாலை சேர்த்துக் காய்ச்சவும். பால் நன்றாக கொதித்து, அவல் நன்றாக அவியும் வரை காய்ச்சவும். அவல் அவிந்ததும் ஏலக்காய்த்தூள் மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்துக் கலந்து விடவும். 1 கொதி வந்ததும், நெய்யில் பொரித்த தேங்காய் சீவல் / சொட்டுகளை தூவி, அடுப்பில்லிருந்து இறக்கிவுடவும்.
சுவையான அவல் பாயாசம் தயார்!
குறிப்பு:
- உங்கள் சுவைக்க ஏற்பப் பொருட்களின் அளவுகளை கேட்டிக் குறைக்கவும்.
Comments
Post a Comment