வெண்டைக்காய் பால்கறி / வெள்ளைக்கறி!

 


தேவையான பொருட்கள்:

  • 250 கிராம் வெண்டைக்காய்
  • 1 வெங்காயம்
  • 3 பச்சைமிளகாய்
  • 1 கப் தேங்காய்ப்பால்
  • தண்ணீர்
  • உப்பு
  • தேசிப்புளி


தாளிதம்:

  • 1 தே.க கடுகு 
  • ½ தே.க பெருஞ்சீரகம்
  • வெங்காயம்
  • செத்தல் மிளகாய்
  • கறிவேப்பிலை
  • எண்ணை

செய்முறை:
  1. ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணை விட்டு சூடாக்கவும். எண்ணை சூடானதும், அதில் கடுகு போடவும். கடுகு வெடிக்கும் போது, பெருஞ்சீரகம், வெங்காயம், செத்தல் மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் கலர் மாறும் வரை வதக்கி வேறாக எடுத்து வைக்கவும்.
  2. அதே பாத்திரத்தில் சிறிது எண்ணை விட்டு, எண்ணை சூடானதும், அதில் வெட்டிய வெங்காயம் மற்றும் பச்சைமிளகாய் போட்டு, வெங்காய கலர் மாறும் வரை வதக்கவும். 
  3. அடுத்ததாக அவிய தேவையான தேங்காய்ப்பால், தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கலந்து, ஒரு கொதி வர விடவும். அதன் பின்பு வெண்டைக்காயை சேர்த்து மூடி 2 - 3 நிமிடங்கள் அவியவிட்டு, அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.
  4. வெண்டைக்காய் பால்கறி / வெள்ளைக்கறி ஆறியதும், தேசிப்புளி மற்றும் தாளிதம் சேர்த்துக் கலக்கவும். சோற்றுடன் பரிமாற சுவையாக இருக்கும்.


வெண்டைக்காய் பால்கறி / வெள்ளைக்கறி தயார்!


 குறிப்பு:

  • உங்கள் சுவைக்கேற்ப்ப பொருட்களின் அளவுகளை கூட்டிக் குறைக்கவும்.
  • இந்த முறையில் செய்யும் பால்கறிக்கு பிஞ்சு வெண்டைக்காய் தான் சுவையாக இருக்கும்.







Comments