ரவா லட்டு!
தேவையான பொருட்கள்:
- ¼ கப் நெய்
- 2 கப் ரவை
- 1 கப் சீனி
- ½ கப் தேங்காய்ப்பூ
- ½ கப் ரின்பால்
- ½ கப் கயூ
- ¼ கப் பிளம்ஸ்
- ¼ கப் தண்ணீர்
- ½ மே.க ஏலக்காய்த்தூள்
செய்முறை:
- கயூவை சிறுசிறு துண்டுகளாக உடைத்து வைத்துக்கவும்.
- ஒரு நொன்ஸ்டிக் சட்டி அல்லது அடி கனமான பாத்திரத்தில் நெய்யை விட்டு, அதில் உடைத்த கயூ மற்றும் பிளம்ஸை சேர்க்கவும். அதனை குறைந்த தீயில் சூடேற்றவும். பிளம்ஸ் பொரியத் தொடங்கும் போது தேங்காய்ப்பூ மற்றும் ரவையை சேர்த்து வறுக்கவும். தேங்காய்ப்பூ மற்றும் ரவை வறுபட்டு கலர் மாறத்தொடங்கும் போது, சீனி மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்றாக கலந்து, 2 நிமிடங்கள் வறுக்கவும். அதன் பின்பு ரின்பால் சேர்த்து நன்றாக கலந்ததும், அடுப்பிலுருந்து இறக்கி வேறு பாத்திரத்தில் மாற்றவும். அந்த பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடாக்கவும்.
- ரவா கலவை இளஞ்சூடாக இருக்கும் பொழுதே, கையை தண்ணீரில் நனைத்து உருண்டைகளாக பிடிக்கவும். ரவா கலவை இறுகினால், சூடான தண்ணீர் தெளித்து நன்கு கலந்து, லட்டு பிடிக்கவும் அல்லது கரண்டியை நனைத்து அதில் ரவா கலவையை வைத்து அழுத்தி எடுக்கவும்.
சுவையான ரவா லட்டு தயார்!
குறிப்பு:
- உங்கள் சுவைக்கேற்ப்ப பொருட்களின் அளவுகளை கூட்டிக்குறைக்கவும்.
- இந்த அளவில் செய்த போது 55 லட்டு வந்தது. நான் உபயோகித்த கரண்டியின் அளவு 15 மி.லீட்டர் = 1 மே.க.
- தேங்காய்ப்பூ தவிர்த்தும் லட்டு செய்யலாம். கயூவிற்க்கு பதிலாக வறுத்த கச்சான் சேர்க்கலாம்.
- ரவா கலவை இறுகினால், சிறு பகுதி ரவை கலவையில் சூடான தண்ணீர் தெளித்து நன்கு கலந்து, லட்டு பிடிக்கவும். தண்ணீர் கூடினால் லட்டு பழுப்புகலராக வரும், அதனால் மேலதிகமாக உள்ள ரவை கலவையை சேர்த்து கலக்கவும். மெல்லிய ஈரப்தமாக இருந்தால் போதுமானது.
கயூ = முந்திரி
கச்சான் = வேர்க்கடலை
ரின்பால் = கன்டன்ஸ்மில்க்
¼ கப் = 4 மே.க
½ கப் = 8 மே.க
Comments
Post a Comment