பூக்கோவா 65 / பொரியல்!
தேவையான பொருட்கள்:
- 1 பெரிய பூக்கோவா
- ½ கப் கடலை மா
- ¼ கப் அரிசி மா
- 1 மே.க மிளகாய்த்தூள்
- ½ தே.க கரம் மசாலா /இறைச்சிச்சரக்குத்தூள்
- ¼ தே.க மஞ்சள்
- ½ தே.க மிளகு தூள்
- ½ தே.க சீரகத்தூள்
- 1 மே.ச இஞ்சி பூண்டு விழுது
- 1 தே.க தேசிப்புளி
- தண்ணீர்
- உப்பு
- எண்ணெய்
- கறிவேப்பிலை
- செத்தல் மிளகாய்
பூக்கோவா ஊறவைக்க:
- சூடான தண்ணீர்
- உப்பு
- மஞ்சள்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீர், உப்பு மற்றும் மள்சள் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து, அதனுள் பூக்கோவாவை துண்டுகளாக வெட்டி போட்டு ஊறவிடவும். இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
- வாயகன்ற பாத்திரத்தில் கடலை மா, அரிசி மா, கரம்மசாலா, மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், மிளகு தூள், சீரகத்தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, ஆகியவற்றை ஒன்றாகக் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேசிப்புளி மற்றும் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கலந்து விடவும்.
- பூக்கோவாவை வடியில் கொட்டி,தண்ணீர் வார விடவும். அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பூக்கோவை மசாலாக்கலவையில் தோய்த்து, அதன் பின்பு எண்ணெயில் பொரிக்கவும். எல்லாப் பக்கங்களும் பொரிவதற்காக திரிப்பிப் போட்டவும். பூக்கோவா 65 நன்றாக பொரித்தும், எண்ணெய் குமிழிகள் அடங்கும். அப்பொழுது பூக்கோவாவை எடுத்து, வடியில் வார விடவும். அதன் பின்பு கறிவேப்பிலை மற்றும் செத்தல் மிளகாயை பொரித்து, பூக்கோவா 65 / பொரியலுடன் கலந்து விடவும்.
சுவையான பூக்கோவா 65 / பொரியல் தயார்!
குறிப்பு:
- உங்கள் சுவைக்கேற்ப்ப பொருட்களின் அளவுகளை கூட்டிக் குறைக்கவும்.
Comments
Post a Comment