மரவள்ளி கிழங்கு பொரியல் / சிப்ஸ்!
தேவையான பொருட்கள்:
- மரவள்ளி கிழங்கு
- மிளகாய்த்தூள்
- உப்பு
- எண்ணை
செய்முறை:
- மரவள்ளி கிழங்கை தோள் நீக்கி, மெல்லிய துண்டுகளாக சீவி வைக்கவும்.
- ஒரு அடி கனமான பாத்திரத்தில் எண்ணை விட்டு, மிதமான தீயில் சூடேற்றவும். சூடான எண்ணையில் கிழங்கு சீவல்களை சிறிது சிறிதாகப் போட்டு பொரித்து, வடியில் எண்ணை வார விடவும்.
- அதன் பின்பு மரவள்ளி கிழங்கு சிப்ஸை வேறு ஒரு பாத்திரத்தில் போட்டு, தேவையான அளவு உப்பு மற்றும் தனி மிளகாய்த்தூள் தூவி, நன்றாக குலுக்கி கலந்து விடவும்.
- மரவள்ளி கிழங்கு சிப்ஸ் நன்றாக ஆறியதும் காற்று போகாத பெட்டியில் போட்டு வைத்து, தேவையான போது பரிமாறலாம்.
சுவையான மரவள்ளி கிழங்கு சிப்ஸ் தயார்!
Comments
Post a Comment