கடலைப்பருப்பு லட்டு /கடலைப்பருப்பு லட்டு மா!
தேவையான பொருட்கள்:
- 600 கிராம் கடலைப்பருப்பு
- 450 கிராம் சீனி
- 1 தே.க ஏலக்காய் விதைகள்
- எண்ணை
செய்முறை:
- கடலைப் பருப்பை தண்ணீர் விட்டு, கழுவி குறைந்தது 3 மணிமத்தியாளங்கள் தண்ணீரில் ஊறவைக்கவும். கடலைப்பருப்பு நன்கு ஊறிய பின்பு, அதனை ஒரு வடியல் வார விடவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணை விட்டு, மிதமான தீயில் சூடேற்றவும். சூடான எண்ணையில் கடலைப்பருப்புக்களை போட்டு பொரித்து எடுத்து, வடியில் எண்ணை வடிய விடவும். அதன் பின்பு பேப்பரில் கொட்டி ஆற விடவும்.
- ஒரு மிக்சி ஜாரில் கடலைப்பருப்பு, சீனி மற்றும் ஏலக்காய் விதைகள் சேர்த்து, விரும்பிய பதத்தில் அரைத்து எடுக்கவும் அல்லது உரலில் இடித்து எடுக்கவும். அரைத்த அல்லது இடித்த முழு மாவை நன்றாக கலந்து விடவும்.
- உருண்டைகளாக பிடிக்க விரும்பினால், சூடாக உள்ள போதே, உருண்டைகளாக பிடிக்கவும். அதன் பின்பு உருண்டைகளை மெல்லிய காகிதத்தில் வைத்து சுற்றவும். அல்லது ஆறிய பின்பு போத்தலில் போட்டு வைக்கவும். கடலைப்பருப்பு லட்டு மாவை காற்று புகாதவாறு வைத்தால், மாதக் கணக்கில் சேமித்து வைக்கலாம். விரும்பிய முறையில் பரிமாறவும்.
சுவையான கடலைப்பருப்பு லட்டு / கடலைப்பருப்பு லட்டு மா தயார்!
குறிப்பு:
- பொருட்களின் அளவுகளை உங்கள் ருசிக்கேற்ப்ப கூட்டிக் குறைக்கவும்.
- பொரித்த கடலைப் பருப்புடன் சீனி சேர்த்து அரைத்தால், குமையாமல் இலகுவாக அரைபடும்.
- விரும்பினால் பாதாம் / கயூவை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி வறுத்து, பிளம்ஸ் சேர்த்தும் லட்டுவாக பிடிக்கலாம்.
Comments
Post a Comment