பெர்ரி பழ கேக்!

 


பெர்ரி பழ கேக்!

தேவையான பொருட்கள்:
  • 4 முட்டை
  • 200 கிராம் சீனி
  • 200 கிராம் கோதுமை மா
  • 1 தே.க பேக்கிங்பவுடர்
  • 1 தே.க வனிலா
  • ½ கப் எண்ணை
  • 1 கப் பெர்ரி பழங்கள்
  • ஐசிங் சுகர்

செய்முறை:
  1. ஒவனை 175 °C சூடேற்றவும்.
  2. முட்டை மற்றும் சீனியை ஒன்றாகச் சேர்த்து கேக் அடிக்கும் கருவியால் நன்றாக பொங்கி வரும் வரை அல்லது குறைந்தது 10 நிமிடங்கள் அடிக்கவும்.
  3. அடித்த முட்டைக் கலவையினுள் எண்ணையை விட்டுக் கலக்கவும். அதன் பின்பு கோதுமை மா, பேக்கிங்பவுடர் மற்றும் வனிலாவை ஒன்றாகச் சேர்த்து அரித்து, கட்டிகள் இல்லாமல் கலந்து விடவும் (கேக் அடிக்கும் கருவியால் அடிக்க கூடாது).
  4. பேக்கிங் தட்டில் பேக்கிங் பேப்பர் விரித்து அல்லது பட்டர் பூசி அதன் மேல் மாவை தூவி, கேக் கலவையை விட்டு சமப்படுத்தி, ஒவனில் 175 °C இல் 35  - 45 நிமிடங்கள் வேக விடவும்.
  5. நன்றாக ஆறியதும், விரும்பினால் ஐசிங் சுகர் தூவி பரிமாறவும்.

மென்மையான பெர்ரி பழ கேக் தயார்!!!


குறிப்பு:

  • மாக்கலவை இறுக்கமாக இருந்தால் 2 - 4 மே.கரண்டி தண்ணீரை, மா சேர்க்கும் பொழுது சேர்க்கவும்.
  • ஒவனுக்கு ஒவன் வெப்பநிலை மாறுபடுவதால், ஒவனின் தன்னமைக்கேற்ப வேக விடும் நேரம் மாறுபடும்.
  • கேக்கிக்ற்கு அவுரி நெல்லி, புற்றுப்பழம், செம்புற்றுப்பழம் மற்றும் லிங்கன்பெர்ரி பழங்களை உபயோகித்தேன். உங்களுக்கு விரும்பிய பெர்ரி பழங்களை சேர்க்கவும். 

 

  • 1 தே.க = 5 மி.லீட்டர்
  • 1 மே.க = 15 மி.லீட்டர்
  • 1 கப் = 250 மி.லீட்டர்




 







 

Comments