ரிப்பன் பகோடா!

 

ரிப்பன் பகோடா!

தேவையான பொருட்கள்: 

  • 2 கப் வறுத்த வெள்ளை அரிசிமா
  • ½ கப் கடலைமா
  • ½ கப் பொட்டுக்கடலைமா 
  • 1 மே.க மிளகாய்த்தூள்
  • ½ மே.க  உள்ளித்தூள்
  • ½ தே.க பெருங்காயத்தூள்
  • 1 தே.க எள்ளு
  • 2 மே.க எண்ணெய்
  • தண்ணீர்
  • உப்பு 


செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தில் அரிசிமா, கடலைமா, பொட்டுக்கடலைமா, மிளகாய்த்தூள், பெருங்காயத்தூள், உள்ளித்தூள், எள்ளு மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, அரித்து கலந்து விடவும். அதனுள் சூடான எண்ணையை விட்டுக் கலந்து விடவும். அதன் பின்பு சிறிது சிறிதாகத் தண்ணீரை தெளித்து, மென்மையான பதத்திற்க்கு குழைத்து வைக்கவும். 
  2. ஒரு பாத்திரத்தில் எண்ணையை விட்டு மிதமான தீயில் சூடேற்றவும். 
  3. முறுக்கு உரலில் பகோடா மாவை வைத்து, சூடான எண்ணையில் புழிந்து விட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்து, விரும்பிய அளவில் முறித்து விடவும்.


சுவையான ரிப்பன் பகோடா தயார்!


குறிப்பு:

  • உங்களின் சுவைக்கேற்ப்ப பொருட்களின் அளவுகளை கூட்டிக் குறைக்கவும்.
  • விரும்பினால் கறுத்த எள்ளுக்குப் பதிலாக வெள்ளை எள்ளு உபயோகிக்கலாம்.
  • மாவின் தன்மைக்கேற்ப தண்ணீரின் அளவு மாறுபடும்.
  • பெருங்காயத்தூள் தவிர்த்தும் ரிப்பன் பகோடா செய்யலாம். ½ கப் பொட்டுக்கடலைமாவிற்க்கு பதிலாக மேலதிகமாக ½ கப் கடலைமா சேர்த்தும் ரிப்பன் பகோடா செய்யலாம்.


அளவுகள்:

  • 1 கப் = 250 மி. லீட்டர்
  • 1 தே.க = 5 மி. லீட்டர்
  • 1 மே.க =15 மி. லீட்டர்
  • 3 தே.க = 1 மே.க











Comments