பட்டர் முறுக்கு!

 


தேவையான பொருட்கள்: 

  • 2 கப் வறுத்த வெள்ளை அரிசிமா
  • 1 கப் கடலைமா
  • 2 தே.க சின்னச்சீரகம்
  • 1 தே.க எள்ளு
  • 50 கிராம் பட்டர்
  • தண்ணீர்
  • உப்பு 
  • எண்ணை


செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தில் அரிசிமா, கடலைமா, சின்னச்சீரகம், எள்ளு, பட்டர் மற்றும் உப்பு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து விடவும். 
  2. அந்த மாக்கலவையினுள் சிறிது சிறிதாகத் தண்ணீரை தெளித்து, மென்மையான பதத்திற்க்கு குழைத்து வைக்கவும். 
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணையை விட்டு மிதமான தீயில் சூடேற்றவும். 
  4. முறுக்கு உரலில் முறுக்கு மாவை வைத்து, ஒரு தட்டில் விரும்பிய வடிவில் புழிந்து வெட்டி, சூடான எண்ணையில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் அல்லது சூடான எண்ணையில் முறுக்கை புழிந்து விட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்து, விரும்பிய அளவில் முறித்து விடவும்.

சுவையான பட்டர் முறுக்கு தயார்!


குறிப்பு:

  • விரும்பினால் மிளகுதூள் அல்லது ஓமம் சேர்த்தும் முறுக்கு செய்யலாம். கறுத்த எள்ளுக்க பதிலாக வெள்ளை எள்ளு உபயோகிக்கலாம்.
  • மாவின் தன்மைக்கேற்ப தண்ணீரின் அளவு மாறுபடும்.

சுண்டு அளவில்(1 சுண்டு = 397 கிராம்  ரின்பால் / மில்க்மெய்ட் ரின்னில் மேவி அளந்து எடுப்பது):

  • 2 சுண்டு வறுத்த வெள்ளை அரிசிமா
  • 1 சுண்டு கடலைமா
  • 1 மே.க சின்னச்சீரகம்
  • ½ மே.க எள்ளு
  • 60 கிராம் பட்டர்
  • தண்ணீர்
  • உப்பு 
  • எண்ணெய்








Comments