தொதல்!
தொதல்!
தேவையான பொருட்கள்:
- 1 சுண்டு வறுத்த சிவப்பு பச்சரிசி மா
- 1 ¼ லீட்டர் தேங்காய்ப்பால்
- 500 கிராம் சர்க்கரை
- 250 கிராம் சீனி
- 1 -2 கப் தண்ணீர்
- 1 மே.க சவ்வரிசி
- 1 மே.க வறுத்த பயறு
- ½ - 1 மே.க ஏலக்காய்த்தூள்
- 25 கிராம் கயூ (முந்திரி)
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து மிதமான வெப்பத்தில் கொதிக்க விடவும். சர்க்கரை கரைந்ததும் அதனை வடிகட்டி மாவுடன் சேர்க்க வேண்டும்.
- அடி கனமான பாத்திரத்தில் சிவப்புபச்சை அரிசிமா, சர்க்கரை, சீனி, மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்து, கட்டி இல்லாமல் கரைக்கவும்.
- மிதமான தீயில், அந்த கலவையை எடுத்து அடுப்பில் வைத்து, அகப்பையால் நன்றாக கிண்டிக் கொண்டே இருக்கவும்.
- தொதல் கலவை இறுகி வரத்தொடங்கும்,அதன் பின்பு எண்ணெயும் கசியத் தொடங்கும். அப்பொழுது வறுத்து வைத்துள்ள சவ்வரிசி, பயறு, கயூ மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து தொடர்ந்து கிண்டிக் கொண்டே இருக்கவும்.
- நன்றாக எண்ணை வெளியேறி, தொதல் இறுகி வரத் தொடங்கும, அப்பொழுது தொதலை தட்டில் போட்டு, சமப்படுத்திவிடவும்.
- தொதல் ஆறியதும் சிறிய துண்டுகளாக வெட்டி பரிமாறவும்.
Comments
Post a Comment