அப்பிள் கேக் / ஆப்பிள் கேக்!
அப்பிள் கேக் / ஆப்பிள் கேக் ( முட்டை சேர்க்காத கேக்)!
தேவையான பொருட்கள்:
- 100 கிராம் அப்பிள் / ஆப்பிள்
- 1 கப் மா
- ½ கப் சீனி
- ½ கப் தயிர்
- ¼ கப் எண்ணை
- 1 தே.க வனிலா
- ½ தே.க பேக்கிங் பவுடர்
- ¼ தே.க பேக்கிங் சோடா
- 1 சிட்டிகை உப்பு
- பெரிய சீனி (விரும்பினால்)
- ஒவனை 175˚C ல் சூடேற்றவும்.
- ஒரு பாத்திரத்தில் சீனி, தயிர் மற்றும் பேக்கிங் சோடாவை சேர்த்து சீனி கரையும் வரை நன்றாக கலக்கவும்.
- 2 நிமிடங்களின் பின்பு எண்ணையை சேர்த்து கலக்கவும். அதன் பின்பு மா, வனிலா, பேக்கிங் பவுடர், மற்றும் உப்பை ஒன்றாகச் சேர்த்து, அரித்து, கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து விடவும். அப்பிள் / ஆப்பிளை தோல் சீவி, துண்டுகளாக வெட்டி, கேக் கலவையுடன் சேர்த்து கலந்து விடவும்.
- ஒரு வட்ட பேக்கிங் தட்டில் (8 இஞ்) எண்ணை பூசி, சிறிது மாவை தூவி, அதனுள் கேக் கலவையை விட்டு சமப்படுத்தவும். அதன் மேல் விரும்பினால் பெரிய சீனியைத் தூவி விடவும்.
- சூடான ஒவனில் அப்பிள் / ஆப்பிள் கேக் கலவையை 175˚C 30- 40 நிமிடங்கள் வேக வைக்கவும்.
சுவையான அப்பிள் / ஆப்பிள் கேக் தயார்!
குறிப்பு:
- அப்பிள் / ஆப்பிள் துண்டுகளாக வெட்டி கேக் கலவையின் மேல் அடுக்கி, சீனி தூவி விரும்பினால் கறுவாதூள் தூவியும் கேக் செய்யலாம். அல்லது அப்பிள் / ஆப்பிள் துண்டுகளை ஒரு கிண்ணத்தில் போட்டு, சீனி மற்றும் கறுவாதூள் சேர்த்துக் கலந்தும் கேக் கலவையின் மேல் அடுக்கியும் அப்பிள் / ஆப்பிள் கேக் செய்யலாம்.
- எண்ணைக்கு பதிலாக பட்டரை உருக்கி உபயோகிக்கலாம்.
- வனிலா எசன்ஸ் உபயோகிப்பது என்றால் தயிருடன் சேர்க்கவும் அல்லது வனிலாசுகர் உபயோகிப்பது என்றால் மாவுடன் சேர்க்கவும்.
Comments
Post a Comment