வாழைப்பழ அப்பம்!


 தேவையான பொருட்கள்:

  • 2 கப் சிவப்பு பச்சரிசி
  • 5 பெரிய வாழைப்பழம்
  • ½ கப் சீனி
  • ½ - ¾ கப் தேங்காய்ப்பால் 
  • ½ கப் தேங்காய்ப்பூ 
  • ½ தே.க பேக்கிங் சோடா
  • உப்பு
  • எண்ணை


செய்முறை:

  1. அரிசியை கழுவி குறைந்தது 2 மணித்தியாலங்கள் ஊற விடவும். அதன் பின்பு அரிசியை வார விடவும். ஒரு மிக்சி ஜாரில் அரிசியை போட்டு, பட்டாக அரைத்து, குருணல் இல்லாமல் அரித்து எடுக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் அரிசிமா, வாழைப்பழம், சீனி, பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து குழைக்கவும். அதன் பின்பு தேங்காய்ப்பால் சேர்த்து கலந்து, குறைந்தது 1 மணித்தியாலம் ஊற விடவும். அதன்பின்பு புளித்த மாவுடன் தேங்காய்ப்பூ சேர்த்து கலந்து விடவும். 
  3. அப்பச்சட்டியில் / நொன்ஸ்டிக் சட்டியில் சிறிது எண்ணை விட்டு மிதமான தீயில் சூடேற்றவும். எண்ணை சூடானதும், சிறிது மாவை விட்டு மூடி, பொன்னிறமாகும் வரை வேக விடவும். அதன்பின்பு திருப்பி, மறு பக்கமும் பொன்னிறமாகும் வரை வேக விடவும். 

சுவையான வாழைப்பழ அப்பம் தயார்!


குறிப்பு:

  • உங்கள் சுவைக்கேற்ப்ப பொருட்களின் அளவை கூட்டிப் குறைக்கவும்.
  • சீனிக்கு பதிலாக சர்க்கரை உபயோகிக்கலாம். இந்த மாக்கலவையை எண்ணையில் பொரித்து பணியாரமாகவும் செய்யலாம்.









Comments