ஆட்டிறைச்சி கறி / குழம்பு
தேவையான பொருட்கள்:
- 2 ½ கிலோ ஆட்டிறைச்சி
- 2 மே.க இஞ்சி உள்ளி விழுது
- 2 பெரிய வெங்காயம்
- ½ தே.க கடுகு
- 1 தே.க பெருஞ்சீரகம்
- ½ தே.க வெந்தயம்
- ½ மே.க இறைச்சிசரக்குத்தூள்
- 1 இஞ் கறுவாப்பட்டை
- 5 ஏலக்காய்
- 5 கராம்பு
- ரம்பை இலை
- கறிவேப்பிலை
- உருளைக்கிழங்கு
- கறித்தூள்
- எண்ணை
- தண்ணீர்
- தேங்காய்ப்பால்
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் எண்ணை விட்டு மிதமான தீயில் சூடாக்கவும். அதில் கடுகு போட்டு, கடுகு வெடிக்கத் தொடங்கியதும், அதில் வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் பெருஞ்சீரகம் போட்டு வதக்கவும்.
- வெங்காயம் பொன்நிறமாக மாறியதும், அதில் ஆட்டிறைச்சி, இஞ்சி உள்ளி விழுது, மஞ்சள், ரம்பைஇலை, உப்பு மற்றும் கறுவா, ஏலக்காய், கராம்பை தட்டி சேர்த்து, நன்கு கலந்து மூடி அவிய விடவும். ஆட்டிறைச்சி தண்ணீர் விட்டு அவியும். தண்ணீர் முழுவதும் வற்றியதும், கறித்தூள் / குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும்.
- அதன் பின்பு ஆட்டிறைச்சி அளவிற்கு தண்ணீர் விட்டு, உப்பு சுவை பார்த்து, குழம்பை மூடி அவிய விடவும். ஒரு கொதி வந்ததும், உருளைக்கிழங்கு மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து மூடி அவிய விடவும். உருளைக்கிழங்கு அவிந்து, குழம்பிலிருந்து எண்ணை வெளிவரும் பொழுது இறைச்சிச்சரக்குத்தூள் சேர்க்கவும். ஒரு கொதி வந்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, தாளிதம் மற்றும் தேசிப்புளி சேர்த்து நன்றாகக் கலந்து விடவும். சுடச் சுட பரிமாறவும்.
சுவையான ஆட்டிறைச்சி கறி / குழம்பு தயார்!
குறிப்பு:
- உங்கள் சுவைக்கேற்ப்ப பொருட்களின் அளவுகளை கூட்டிக் குறைக்கவும்.
- ரம்மைஇலைக்கு பதிலாக பிரியாணிஇலை உபயோகிக்கலாம். கறுவா, ஏலக்காய், கராம்பு சேர்க்காவிட்டால் மேலதிகமாக கரம் மசாலா / இறைச்சிச்சரக்குத்தூள் சேர்க்கவும்.
- தாளிதம் இறுதியாக சேர்க்க விரும்பினால் வெங்காயம் பொன்நிறமாக மாறியதும், அதிலிருந்து சிறிது எடுத்து வைத்து பின்பு இறுதியாக சேர்க்கவும். அல்லது தாளிதம் செய்தது இறுதியாக சேர்க்கவும்.
Comments
Post a Comment