கடலைக்கறி!

தேவையான பொருட்கள்:
- 2 கப் கொண்டைக்கடலை (அவித்தது)
- 2 வெங்காயம்
- 2 தக்காளி
- 1 மே.க இஞ்சி
- 1 மே.க உள்ளி
- 2 மே.க மல்லித்தூள் (+/-)
- 1 மே.க மிளகாய்த்தூள் (+/-)
- 1 மே.க பெருஞ்சீரகம்
- 1/2 மே.க கரம்மசாலா(+/-)
- 1/4 தே.க மஞ்சள்
- 200 மி.லீ தேங்காய்ப்பால்(+/-)
- தண்ணீர்
- உப்பு
- எண்ணை
- மல்லிஇலை(-)
தாளிக்க:
எண்ணை
1 பெரிய வெங்காயம்
1 தே.க கடுகு
1 தே.க சின்னச்சீரகம்
கறிவேப்பிலை
செத்தல் / காயந்த மிளகாய்
பச்சைமிளகாய்
செய்முறை:
- தக்காளி மற்றும் வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். பச்சைமிளகாயை நீளமாக கீறி வைக்கவும். இஞ்சி மற்றும் உள்ளியை சீவியோ அல்லது இடித்தோ வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணை விட்டு, மிதமான தீயில் சூடேற்றவும். அதில் வெங்காயம் போடவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், அதில் தக்காளி, இஞ்சி, உள்ளி, மல்லித்தூள், மிளகாய்த்தூள், கரம்மசாலா, மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து வதக்கவும்.
- தக்காளி வதங்கி பிரண்டு வரும் பொழுது, தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். தூள் மணம் போனதும் கடலை மற்றும் தேங்காய்ப்பால் விட்டுக் கலந்து, அவிய விடவும். இறக்கும் தருவாயில் பெருஞ்சீரகத்தை இடித்துப் போட்டு, ஒரு கொதி வர இறக்கவும்.
தாளிதம்:
- ஒரு பாத்திரத்தில் எண்ணை விட்டு, மிதமான தீயில் சூடேற்றவும். அதில் கடுகைப் போடவும். கடுகு வெடித்ததும், அதில் மீதிப் பொருட்களைப் போட்டு வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக மாறியதும், அதை கறியில் போட்டு கலந்து பரிமாறவும்.
குறிப்பு:
- மல்லித்தூள், மிளகாய்த்தூளுக்கு பதிலாக கறித்தூள் பாவிக்கலாம்.
- சிறிது கடலையை மசித்து கறியுடன் கலந்தால் கறி தடித்து வரும்.
Comments
Post a Comment