கோப்பித்தூள்!



தேவையான பொருட்கள்:
  • 1 சுண்டு கோப்பி
  • 2 சுண்டு மல்லி
  • 50 கிராம் வேர்க்கொம்பு
  • 50 கிராம் சின்னச்சீரகம்
  • 50 கிராம் சீனி

செய்முறை:
  1. ஒரு பாத்திரத்தில், கோப்பையை நன்றாக வறுத்து, வேறு ஒரு பாத்திரத்தில் போடவும். மல்லியை மிதமான வெப்பத்தில் வறுக்கவும். மல்லி வறுத்த கோப்பி நிறம் வரும் பொழுது, வேர்க்கொம்பை தட்டி சேர்த்து 3 நிமிடங்கள் வறுக்கவும். முன்பாக வறுத்த கோப்பி மற்றும் சின்னச்சீரகம் சேர்த்து, சீரகம் வறுபட்டு வாசம் வரும்வரை வறுக்கவும். அதன் பின்பு சீனியை சேர்த்து வறுக்கவும். சீனி இளகியதும், அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.
  2. வறுத்து வைத்த பொருட்களை மிக்சி ஜாரில் போட்டு மைதாக அரைக்கவும். அதனை அரிதட்டில் போட்டு அரிக்கவும். குறைந்தது 2 முறைகளாவது கோப்பித்தூளை அரிக்க வேண்டும். இதனை காற்று புகாத போத்தலில் போட்டு மூடி பாதுகாக்கலாம். 
  3. இந்த கோப்பித்தூளில் பால் சேர்த்து, பால் சேர்க்காமலும் மற்றும் முட்டைகோப்பியாக போட்டுக் குடிக்க சுவையாக இருக்கும்.

சுவையான கோப்பித்தூள் தயார்!



குறிப்பு:
மல்லி = தனியா
வேர்க்கொம்பு = சுக்கு
சீனி = சர்க்கரை

மேலே உள்ள சுண்டு அளவு கிராமில்
  • 115 கிராம் கோப்பி = 1 சுண்டு கோப்பி
  • 180 கிராம் மல்லி = 2 சுண்டு மல்லி
  • 50 கிராம் வேர்க்கொம்பு
  • 50 கிராம் சின்னச்சீரகம் 
  • 50 கிராம் சீனி

கோப்பி சுவை கூடுதலாக வேண்டும் என்றால்:  
  • 250 கிராம் கோப்பி
  • 250 கிராம் மல்லி 
  • 50 கிராம் வேர்க்கொம்பு
  • 50 கிராம் சின்னச்சீரகம்
  • 50 கிராம் சீனி
உங்கள் சுவைக்கேற்ப்ப பொருட்களின் அளவுகளை கூட்டிக் குறைக்கவும்.










Comments