ஸ்ட்ராபெரி மூஸ் கேக்!
தேவையான பொருட்கள்:
கேக்:
- 3 முட்டை
- 100 கிராம் சீனி
- 100 கிராம் மா
- ½ தே.கரண்டி பேக்கிங்பவுடர்
- 3 முட்டை
- 3 மே.க சீனி
- 300 மி.லீ பிரஸ் கிறீம்
- 1 பைக்கட் ஸ்ட்ராபெரி ஜெலரீன்
- தண்ணீர்
அலங்கரிக்க:
- கிறீம்
- ஸ்ட்ராபெரி பழங்கள்
செய்முறை:
கேக்:
- ஒவனை 175 °C ல் சூடேற்றவும்.
- 24 cm வட்ட பேக்கிங் தட்டில், பேக்கிங்பேப்பர் வைத்து வைக்கவும் (புகைப்பட விளக்கத்தை பார்க்கவும்).
- ஒரு பாத்திரத்தில் முட்டை மற்றும் சீனியை சேர்த்து கேக் அடிக்கும் கருவியால் குறைந்தது 5 நிமிடங்கள் அதி வேகமாக அடிக்கவும். அதனுள் மா மற்றும் பேக்கிங் பவுடரை சேர்த்து, சிறிது சிறிதாக அரித்துக் கலந்து விடவும் (கேக் அடிக்கும் கருவி உயபோகிக்க வேண்டாம்).
- கேக் கலவையை பேக்கிங் தட்டில் விட்டு, சமப்படுத்தவும். கேக்கை ஒவனில் 20 -30 நிமிடங்கள் வேக விடவும்.
- கேக்கை நன்றாக ஆற விடவும்.
ஸ்ட்ராபெரி மூஸ்:
- ஒரு கிண்ணத்தில் ஸ்ட்ராபெரி ஜெலரீனை போட்டு, அந்த பைக்கட்டில் குறிப்பிட்ட அளவில் அரைப் பங்கு நன்றாக கொதித்த தண்ணீர் சேர்த்துக் கலந்து ஆற விடவும்.
- பிறஸ் கிறீமை மென்மையான கிறீமாக அடித்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் முட்டை மற்றும் சீனியை சேர்த்து கேக் அடிக்கும் கருவியால் குறைந்தது 5 நிமிடங்கள் அதி வேகமாக அடிக்கவும். அதனுள் ஜெலரின் கலவையை சேர்த்துக் நன்றாகக் கலந்து விடவும்.
- முட்டைக் கலவையினுள், அடித்து வைத்த பிறஸ் கிறீமைச் சேர்த்து கலந்து விடவும் (கேக் அடிக்கும் கருவி உயபோகிக்க வேண்டாம்).
- ஸ்ட்ராபெரி மூஸ் கலவையை ஆறிய கேக்கின் மேல் விட்டு, குறைந்தது 6 மணித்தியாலங்கள் குளிர்சாதனப் பெட்டியில் இறுக வைக்கவும்.
அலங்கரிக்கும் முறை:
- ஸ்ட்ராபெரி மூஸ் கேக்கின் கரைப் பகுதியை கத்தியால் கீறி,அதன் பின்பு பேக்கிங் தட்டை கழட்டவும். ஒரு கப்பில் சூடான தண்ணீரை விட்டு, அதில் கத்தியை வைக்கவும். அடுத்ததாக சூடான தண்ணீரில் வைத்த கத்தியால் (இயன்ற அளவு தண்ணீர்த் தன்மை இல்லாமல் உபயோகிக்கவும்) மேல் பக்கத்தின் கரைப் பகுதியை அழுத்தி, சமப்படுத்தவும்.
- அதன் பின்பு கேக்கை, கேக் வைக்கும் தட்டில் வைக்கவும். விரும்பினால் கிறீம் மற்றும் ஸ்ட்ராபெரி பழங்களால் அலங்கரித்து பரிமாறவும்.
சுவையான ஸ்ட்ராபெரி மூஸ் கேக் தயார்!
குறிப்பு:
- ஜெலரின் ஆறியதும் இறுகி இருந்தால், அதனை கரண்டியால் கலந்து, அதன் பின்பு முட்டை கலவையினுள் சேர்க்கவும்.
- கேக் கலவையில் மா சேர்க்கும் போதும், ஸ்ட்ராபெரி மூஸ் கலவையில் அடித்து வைத்த பிறஸ் கிறீமைச் சேர்க்கும் போதும் கேக் அடிக்கும் கருவி உயபோகிக்க கூடாது.
- கேக் ஆற விடும் போது, பேங்கிங் தட்டின் அடிப்பாகத்தை தரையில் வைக்காமல், திருகணை அல்லது அது மாதிரியான பொருட்களின் மேல் வைத்து ஆற விடவும். அப்பொழுது தான் கேக்கின் அடிப்பாகத்தில் காற்றுப் பட்டு இலகுவாக ஆறும் மற்றும் கேக்கின் அடிப்பாகத்தில் ஈரத் தன்மை வராது.
- கேக்கை கிறீம் மற்றும் ஸ்ட்ராபெரி பழங்களால் அலங்கரிப்பதற்கு பதிலாக சொக்லேட்டாலும் அலங்கரிக்கலாம்.
Comments
Post a Comment