தேவையான பொருட்கள்:
- 250 கிராம் மங்கு
- 150 கிராம் வெங்காயம்
- 100 கிராம் கத்தரிக்காய்
- 50 கிராம் மாங்காய்
- 5 பச்சை மிளகாய்
- தேங்காய்ப்பால்
- உப்பு
- மஞ்சள்
- கறிவேப்பிலை
- 1/2 தே.க பெருஞ்சீரகம்*
செய்முறை:
- மங்கு மீனை சத்தம் செய்து வைக்கவும். வெங்காயம், மாங்காய் மற்றும் மிளகாயை சின்னச் சின்ன துண்டுகளாகவும் கத்தரிக்காயை நீள துண்டுகளாகவும் வெட்டி வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் வெட்டி வைத்த வெங்காயம், மாங்காய், கத்தரிக்காய், மிளகாய், மஞ்சள் மற்றும் உப்பை ஆகியவற்றை போட்டு தண்ணீர் விட்டு, அவிய விடவும்.
- அதன் பின்பு தேவையான அளவு அல்லது 100 மி.லீ தேங்காய்ப்பாலை விட்டு கலக்கவும். அதனுடன் மங்கு, கறிவேப்பிலை மற்றும் விரும்பினால் பெருஞ்சீரகத்தை தட்டிப் போட்டு அவிய விடவும். மங்கு அவிந்ததும் அடுப்பை அணைக்கவும். சுடச் சுட சோற்றுடன் சேர்த்து பரிமாறவும்.
மங்கு பால் தீயல் தயார்!!!
குறிப்பு:
- புளிப்பு தன்மை குறைவான மாங்காய் என்றால், தேங்காய்ப்பால் விடுவதற்கு முன்பு பழப்புளி விட்டு, ஒரு கொதி வந்த பின்பு தேங்காய்ப்பால் விடவும்.
- மங்கு சேர்த்த பின்பு கரண்டியால் அடிக்கடி கிண்டாமல், சட்டியை ஆட்டி கலக்கவும். கரண்டியால் அடிக்கடி கிண்டினால் மங்கு உதிர்ந்த விடும்.
- கத்தரிக்காய் மற்றும் மாங்காய் தவிர்த்தும் தீயல் செய்யலாம். மாங்காயுக்கு பதிலாக பழப்புளி விட வேண்டும்.
Comments
Post a Comment