வாழைப்பழ கப்கேக்!
தேவையான பொருட்கள்:
- 150 கிராம் சீனி
- ½ கப் எண்ணை
- 2 பெரிய வாழைப்பழங்கள்
- 225 கிராம் மா
- 2 முட்டை
- 2 தே.கரண்டி பேக்கிங்பவுடர்
- 1 தே.கரண்டி வனிலா பவுடர்
- 1 சிட்டிகை உப்பு
- 75 கிராம் சொக்லேட் துண்டுகள்
செய்முறை:
- ஒவனை 200 °C ல் சூடேற்றவும்.
- ஒரு மிக்சி ஜாரில் சீனி, முட்டை, வாழைப்பழங்கள் மற்றும் எண்ணையை சேர்த்து நன்கு அடிக்கவும்.
- மா, பேக்கிங் பவுடர், வனிலாபவுடர் மற்றும் உப்பு ஆகியவற்றை கேக் கலவையினுள் சேர்த்துக் அடித்துக் கலக்கவும். மிக்சி ஜாரின் பக்கங்களில் மா கலக்குப்படாமல் ஒட்டுப்பட்டிருக்கும், அதனை கேக் கலவையுடன் சேர்த்துக் கலந்து விடவும். அதன் பின்பு சொக்லேட் துண்டுகளை கப்கேக் கலவையுடன் சேர்த்து கலந்து விடவும் (விரும்பினால் சிறிது சொக்லேட் துண்டுகளை மேலே தூவ எடுத்து வைக்கவும்).
- கப் கேக் தட்டில் கப் கேக் பேப்பரை வைத்து, அதன் 3/4 பகுதி வரை கேக் கலவையை விடவும். விரும்பினால் அதன்மேல் ஒரு சில சொக்லேட் துண்டுகளை தூவவும். ஒவனில் கப் கேக்குகளை அண்ணளவாக 18 - 20 நிமிடங்கள் வேக விடவும்.
சுவையான வாழைப்பழ கப்கேக் தயார்!
குறிப்பு:
- உங்கள் சுவைக்கேற்ப்ப பொருட்களின் அளவைகளை கூட்டிக் குறைக்கவும்.
- இந்த கப் கேக்கை பிறீசரில் வைத்து சேமிக்கலாம்.
1 தே.க = 5 மி.லீ
½ கப் = 125 மி.லீ
Comments
Post a Comment