மசாலா கேக்!

 


தேவையான பொருட்கள்:

  • 250 கிராம் மா
  • 225 கிராம் சீனி
  • 200 மி.லீ தயிர்
  • 100 மி.லீ பால்
  • 100 மி.லீ எண்ணை
  • 1 தே.க பேக்கிங் பவுடர்
  • ½ தே.க பேக்கிங் சோடா
  • 1 சிட்டிகை உப்பு
  • 2 தே.க கறுவா தூள்
  • ½ தே.க கராம்பு தூள்(+/-)
  • ½ தே.க சாதிக்காய் தூள் (+/-)
  • ½ தே.க வேர்க்கொம்பு தூள் (+/-)
  • ¼ தே.க ஏலக்காய் தூள்(+/-)


செய்முறை:

  1. ஒவனை 175˚C ல் சூடேற்றவும்.
  2. ஒரு பாத்திரத்தில் சீனி, தயிர், பால் மற்றும் எண்ணையைச் சேர்த்து, சீனி கரையும் வரை நன்றாக கலக்கவும்.
  3. மீதி உள்ள அனைத்துப் பொருட்களையும் தயிர்க் கலவையினுள், அரித்து, கட்டிகள் இல்லாமல் நன்றாக கலந்து விடவும்.
  4. ஒரு பேக்கிங் தட்டில் ( 28X18செ.மீ) பேக்கிங் பேப்பர் விரித்து, கேக் கலவையை விட்டு சமப்படுத்தவும்.
  5. சூடான ஒவனில் கேக் கலவையை 175˚C 30- 40 நிமிடங்கள் வேக வைக்கவும்.
  6. மசாலா கேக் ஆறியதும், விரும்பினால் ஜசிங் சுகர் தூவி, பரிமாறவும்.


சுவையான மசாலா கேக் தயார்!


குறிப்பு:

  • பேக்கிங் பேப்பர் இல்லாட்டால் பேக்கிங் தட்டில்பட்டர் / எண்ணை பூசி, அதன் மேல் சிறிது மாவைத் தூவி கேக் கலவையை விடவும்.
  • எண்ணைக்கு பதிலாக பட்டரை உருக்கி உபயோகிக்கலாம்.










Comments