பனங்காய் பணியரம்!




தேவையான பொருட்கள்:

  • 750 மி.லீ பனங்களி
  • 1 ½ கப் சீனி
  • 1 ¼ கப் அவித்த மா
  • 1 ¼ கப் அவிக்காத மா
  • உப்பு
  • எண்ணை


செய்முறை:

  1. பனங்களியை பச்சை வாடை போகும் வரை காய்ச்சி, அதனை ஆற விடவும்.
  2. ஆறிய  பனங்களியுடன் சீனி மற்றும் உப்புச் சேர்த்து, சீனி கரையும் வரை நன்றாக கலந்து விடவும்.
  3. அதன் பின்பு அவித்த மற்றும் அவிக்காத கோதுமை மாக்களைச் சேர்த்துக் கலந்து, 15 - 30 நிமிடங்கள் மூடி வைக்கவும்.
  4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி மிதமான வெப்பத்தில் சூடாக்கவும். எண்ணை சூடானதும், கையை தண்ணீரில் நனைத்து, குழைத்து வைத்த மாவை சிறு சிறு உருண்டைகளாக எடுத்து, எண்ணையில் போட்டு பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும். பனங்காய் பணியாரத்தை வடியில் வார விட்டு, சிறிது நேரம் பேப்பரில் போட்டு வைத்தால் எண்ணைத் தன்மை பனங்காய் பணியாரத்தில் குறைவாக இருக்கும். பனங்காய் பணியாரத்தை அடுத்த நாள் சாப்பிட சுவையாக இருக்கும்.


சுவையான பனங்காய் பணியாரம் தயார்.


குறிப்பு:

  • உங்கள் சுவைக்கேற்ப்ப பொருட்களின் அளவை குறைத்துக் கூட்டவும்.
  • பனங்காய் பணியாரத்திற்கு அவிக்காத மா மட்டும் சேர்த்தும் செய்யலாம் என்று கேள்விப் பட்டேன். ஆனால் அனுபவம் இல்லை.
  • பனங்காய் பணியாரத்தை 2 அல்லது 3 நாட்கள் வைத்துக் கூட சாப்பிடலாம்.







Comments