புரோக்கோலி வறை!
தேவையானபொருட்கள்:
சுவையான புரோக்கோலி வறை தயார்!!!
- 1 புரோக்கோலி
- ¼ தே.க மஞ்சள்
- 1½ தே.க மிளகுசீரகத்தூள்
- 2 முட்டை
- 1 வெங்காயம்
- 2 மிளகாய்
- 1 தே.க கடுகு
- 1 தே.க சின்னச்சீரகம்
- 3 செத்தல்மிளகாய்
- கறிவேப்பிலை
- உப்பு
- எண்ணெய்
செய்முறை:
- ஒருபாத்திரத்தில் சிறிது உப்புப் போட்டு, இளஞ்சூடான தண்ணீர் விட்டுக் கலந்துவிடவும்.அதில் புரோக்கோலியை சிறுதுண்டுகளாக வெட்டிப் போட்டு விடவும், சில நிமிடங்களின் பின்பு, புரோக்கோலியை கழுவி எடுத்து வாரவிடவும்.
- ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணை ஊற்றி சூடானதும், அதில் கடுகைப் போடவும், கடுகு வடிக்கும் போது அதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை, சின்னச்சீரகம் மற்றும் காய்ந்தமிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் கலர் மாறும் பொழுது அதனுடன் புரோக்கோலி, உப்பு மற்றும் மஞ்சள் சேர்த்துக் கலந்துவிடவும். புரோக்கோலி தண்ணீர் விடும். அந்தத் தண்ணீர் வற்றும் வரை புரோக்கோலியை கிண்டி விடவும். அதன் பின்பு ஒரு கிண்ணத்தில் முட்டை மற்றும் உப்பைச் சேர்த்து, அடித்து புரோக்கோலியின் மேல் விட்டு, மிளகுசீரகத்தூள் சேர்த்து, உருந்து வரும் வரை கிண்டவும்.
சுவையான புரோக்கோலி வறை தயார்!!!
குறிப்பு:
- முட்டைக்கு பதிலாக தக்காளி சேர்த்தும் வறை செய்யலாம்.
- தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி, புரோக்கோலியுடன் சேர்த்துக் கலந்து, வதக்கவும். புரோக்கோலி மற்றும் தக்காளி நன்றாக வதங்கியதும், மிளகுசீரகத்தூள் சேர்த்துக் கிண்டி விடவும்.
Comments
Post a Comment