பூந்தி லட்டு!



முன்பு பொரித்த பூந்தியில் லட்டு செய்யும் முறை. இந்த செயல்முறையின் கீழே பூந்தியைப் பொரித்து உடனே சீனிப்பாகுவில் சேர்த்து பூந்திலட்டு செய்யும் செய்முறை லிங் உள்ளது.
தேவையான பொருட்கள் :
  • 3 சுண்டு கடலை மாவில் பொரித்த பூந்தி
  • 3¾ சுண்டு சீனி*
  • தண்ணீர்
  • 2 தே.க ஏலக்காய்தூள் (-/+)
  • 75 கிராம் கயூ
  • 25 கிராம் தர்பூசணி விதைகள்* (-)
  • கலரிங் / குங்கும்ப்பூ*
  • நெய்
  • உப்பு (-)
  • எண்ணை
செய்முறை :
  1. கடலை மா, உப்பு மற்றும் கலரிங் சேர்த்து, தோசை மா பதத்தில் கரைத்துக் கொள்ளவும்.
  2. பெரிய பாத்திரத்தில் எண்ணை ஊற்றி நன்றாக சூடானதும், சூடான எண்ணெயின் மேல் எண்ணைக்கரண்டி அல்லது பூந்திக்கரண்டியை பிடுத்து, அதில் மாவை சிறிது ஊற்றவும், அப்பொழுது பூந்தி கரண்டி ஓட்டையின் வழியே பூந்தி முத்து முத்தாக விழும். அதனை ஈரத்தன்மை இல்லாமல் பொரித்து எடுக்கவும் (பூந்தி குறைந்தது 1 மாதம் வரை பழுதாகாமல் இருக்கும்).
  3. சீனி மற்றும் கலரிங்குடன் 2¾ சுண்டு தண்ணீரைச் சேர்த்து, சீனிப் பாகு காய்ச்சவும். பாகுவை பெரிவிரலில் எடுத்து, ஆட்காட்டி விரலால் தொட்டுப் பார்த்தால், பாகு ஒட்டிப் பிடிக்க வேண்டும். ஆனால் ஒரு கம்பியாக வரக் கூடாது. அதனுடன் 1 தே.க ஏலக்காய்தூள் சேர்த்துக் கலந்து விடவும்.
  4. சூடான சீனிப்பாகுடன் பூந்திகளைச் சேர்த்துக கலந்து மூடி விடவும்.அதனை இடைக்கிடை கலந்து, குறைந்தது 5 மணித்தியாலங்கள் ஊற விடவும்.
  5. ஒரு பாத்திரத்தில் நெய் விட்டு, கயூ சேர்த்து பொரிக்கவும். கயூ கலர் மாறத் தொடங்கும் போது , தர்பூசணி விதைகளைச் சேர்த்து பொன்னிறமாக பொரித்தெடுக்கவும், பூந்திக்கலவையுடன் 1 தே.க ஏலக்காய்தூள் மற்றும் பொரித்த கயூ, தர்பூசணி விதைகளைச் சேர்த்து கலக்கவும். இரு கைகளிலும் நெய் தடவி, ஒரு கைபிடி பூந்தியை எடுத்து, இரு கைகளாலும் இறுக்கி லட்டு பிடிக்கவும். இந்த அளவில் அண்ணளவாக 45 -50 லட்டுகள் செய்யலாம்.
சுவையான பூந்தி லட்டு தயார்!

குறிப்பு*:
விரும்பினால் குங்கும்ப்பூ, பிளம்ஸ் மற்றும் கற்கண்டும் சேர்த்தும், பூந்தி லட்டு செய்யலாம்.














Comments