காளான் 65 / பொரியல்!



தேவையான பொருட்கள்:
  • 250 கிராம் காளான்
  • 4 மே.க கடலை மா
  • 2 மே.க அரிசி மா
  • ½ - 1 மே.க மிளகாய்த்தூள்
  • ¼ தே.க கரம் மசாலா /இறைச்சிச்சரக்குத்தூள்
  • ¼ தே.க மஞ்சள்
  • ¼ தே.க மிளகு தூள்
  • ¼ தே.க சீரகத்தூள்
  • 1 தே.க இஞ்சி பூண்டு விழுது
  • 1 தே.க தேசிப்புளி
  • தண்ணீர்
  • உப்பு
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை
  • செத்தல் மிளகாய்

செய்முறை:
  1. காளானை நன்கு கழுவி, ஒரு காளானை 4 அல்லது 6 துண்டுகளா வெட்டி வைக்கவும். இஞ்சி மற்றும் பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
  2. வாயகன்ற பாத்திரத்தில் கடலை மா, அரிசி மா, கரம்மசாலா, மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், மிளகு தூள், சீரகத்தூள், உப்பு, இஞ்சி பூண்டு விழுது, ஆகியவற்றை ஒன்றாகக் சேர்த்துக் கலக்கவும். அதனுடன் தேசிப்புளி மற்றும் தண்ணீர் சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கலந்து விடவும்.
  3. அதன் பின்பு மாக்கலவையுடன் காளானைச் சேர்த்து திரும்பவும் ஒரு முறை நன்றாகக் கலந்து 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
  4. 15 நிமிடங்கள் மசாலாவில் காளான் ஊறியதும், அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடாக்கவும். பிசைந்து வைத்துள்ள காளானை எண்ணெயில் பொரிக்கவும். காளான் பொரிக்கும் போது அடிக்கடி காளானைக் கிளறி விடவும். எண்ணெய் குமிழிகள் காளானில் அடங்கியதும் காளானை எடுத்து விடவும். இவ்வாறு எல்லாக் காளானையும் பொரித்து எடுக்கவும். அதன் பின்பு கறிவேப்பிலை மற்றும் செத்தல் மிளகாயை பொரித்து, காளான் 65 / பொரியலுடன் கலந்து விடவும்.
  5. சுவையான காளான் 65 / பொரியல் தயார்.






Comments