சான்விச் கேக்!
தேவையான பொருட்கள்:
- 100 கிராம் பட்டர்
- 125 கிராம் சீனி
- 2 முட்டை
- 150 கிராம் மா
- 1 தே.க பேக்கிங் பவுடர்
- 1 தே.க வனிலா
- ¼ கப் பால்
செய்முறை:
- பட்டர் மற்றும் சீனியை சேர்த்து நன்கு அடித்துக் கொண்டு ஒவ்வொரு முட்டையாகச் சேர்த்து அடிக்கவும் (விட்ட முட்டை நன்றாக அடித்துக் கலந்த பின்பே அடுத்த முட்டையை விடவும்).
- மா, பேக்கிங் பவுடர் மற்றும் வனிலாபவுடரை, அரிதட்டினால் கேக் கலவையினுள் அரித்து, சேர்த்துக் கலக்கவும். அடுத்ததாக பாலைச் சேர்த்துக் கலந்து விடவும்.
- சான்விச் மேக்கரை சூடாக்கவும். சான்விச் மேக்கர் சூடானதும், பட்டரை பூசி, சான்விச் கேக் கலவையை விட்டு, மூடி வேகமாக விடவும். பொன்னிறமாக வெந்ததும், சான்விச் கேக்கை சான்விச் மேக்கரில் இருந்து எடுத்து ஆறவிடவும். சான்விச் கேக்குடன் ஜாம், சொக்லேட் சோஸ் சேர்த்து அல்லது மாச்சீனி தூவி பரிமாறவும்.
சான்விச் கேக் தயார்!
குறிப்பு :
முட்டைக்கு பதிலாக தயிர் சேர்த்தும், பட்டருக்கு பதிலாக எண்ணை சேர்த்தும் மற்றும் சொக்லேட் சுவையிலும் சான்விச் கேக் செய்யலாம்.
Comments
Post a Comment