நண்டுக்கறி!




தேவையான பொருட்கள்:

  • ¾ கிலோ நண்டு
  • 1 வெங்காயம்
  • 3 தக்காளி
  • 1 மே.க இஞ்சி மற்றும் பூண்டு விழுது
  • ½ கப் தேங்காய்ப்பால் (+/-)
  • 1 மே.க மிளகு
  • ½ மே.க பெருஞ்சீரகம் 
  • ½ தே.க வெந்தயம்
  • ½ தே.க மஞ்சள் தூள்
  • 3 மே.க கறித்தூள் 
  • புளி
  • எண்ணெய்
  • உப்பு
  • மசாலா (3 ஏலக்காய், 5 கராம்பு , 2 இஞ் கறுவாப்பட்டை)


தாளிக்க தேவையான பொருட்கள்:

  • எண்ணெய்
  • 1/2  வெங்காயம்
  • 1 தே.க கடுகு 
  • 1 தே.க சின்னச்சீரகம்
  • கறிவேப்பிலை
  • செத்தல்மிளகாய்


செய்முறை:

  1. நண்டை துப்பரவு செய்து வைக்கவும். புளியை 10 நிமிடங்கள்  ஊற வைத்து புளிச்சாறு எடுத்து வைக்கவும். மிளகு, பெருஞ்சீரகத்தை இடித்து வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு, மிதமான தீயில் எண்ணெய் சூடானதும், வெங்காயம், வெந்தயம் மற்றும் மசாலா பொருட்கள் சேர்த்து, வெங்காயம் கலர் மாறும் வரை வதக்கி, அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
  3. அடுத்து நண்டு, உப்பு, மஞ்சள், பூண்டு மற்றும் இஞ்சி விழுது ஆகியவற்றை சேர்த்து  வதக்கவும். கறித்தூள் சேர்த்து நன்றாக கலந்து, தண்ணீர் மற்றும் புளி கரைசலைச் சேர்த்து, நன்கு கலந்து அவிய விடவும்.
  4. நண்டு அவிந்ததும், தேங்காய்ப்பால் விட்டுக் கலந்து, கறியிலிருந்து எண்ணெய் வெளி வரும் வரை அவிய விட்டு, அதனுடன் இடித்து வைத்த மிளகு பெரிஞ்சீரகத்தூளைச் சேர்த்துக் கலந்து, ஒரு கொதி வர அடுப்பை அணைத்து விடவும்.
  5. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி,  எண்ணெய் சூடானதும் கடுகு சேர்த்து, வெடிக்க தொடங்கியதும் தாளிப்பதர்க்கான மீதிப் பொருட்களைப் போட்டு, வெங்காயம் பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். தாளிதத்தை கறியில் போட்டு நன்கு கலந்து விடவும்.
  6. சுடச் சுட நண்டுக் கறியை சோற்றுடன் சேர்த்து பரிமாற சுவையாக இருக்கும்.


நண்டுக் கறி தயார்!


குறிப்பு:

  • இஞ்சி மற்றும் மசாலா பொருட்கள் சேர்க்காமலும் கறி செய்யலாம்.
  • கறித்தூள் இல்லையென்றால், 3 மேசைக்கரண்டி கறித்தூளுக்கு பதிலாக 2 மேசைக்கரண்டி கொத்தமல்லி + 1/2 - 1 மேசைக்கரண்டி மிளகாய்தூள் சேர்க்கலாம்.













Comments