ஸ்ட்ராபெரி ஜோக்கட் சியா புடிங்!


தேவையான பொருட்கள்:

  • 6 மே.க சியா விதைகள்
  • 1½ கப் பால் 
  • 9 ஸ்ட்ராபெரி
  • 1 கப் ஸ்ட்ராபெரி ஜோக்கட்
  • 1 -2 மே.க தேன் (-)


செய்முறை:

  1. ஒரு கிண்ணத்தில் 2 மேஜைக்கரண்டி சியா விதையுடன் ½ கப் பால்( காய்ச்சி ஆறிய பால்) விட்டு நன்றாக கலக்கவும் (மேலே உள்ள அளவு 3 கிண்ணங்களில் செய்யும் அளவு). 15 நிமிடங்களில் 2 அல்லது 3 முறைகள் நன்றாகக் கலக்கவும், அதன் பின்பு இதனை குறைந்தது 6 மணித்தியாளங்கள் அல்லது இரவு முழுவதும் குளிர்சாதனப்பெட்டியில் வைக்கவும். 
  2. காலையில் ஒரு மிக்சி ஜாரில் ஸ்ட்ராபெரி பழங்கள், ஸ்ட்ராபெரி ஜோக்கட் மற்றும் தேன் சேர்த்துக் கூழாக அடிக்கவும். பழக் கலவையை சியா கலவை மேல் விடவும். அதன் பின்பு சொக்லேட் அல்லது பாதாம் கொண்டு அலங்கரித்து, காலைச் சிற்றுண்டியாக பறிமாறவும்.
  3. சுவையான மற்றும் சத்தான ஸ்ட்ராபெரி ஜோக்கட் சியா புடிங் தயார்!!!


குறிப்பு:

  • சியா விதையில் சத்துக்கள் நிறைந்து உள்ளது. சியா விதை உடலுக்கு வலிமை சேர்க்கும் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளதால் உடல் எடை குறைக்க  விரும்புவர்கள் இதனை உண்பார்கள்.









Comments

Post a Comment