மட்டன் கடாய்!

 


தேவையான பொருட்கள்:

மசாலா வறுத்து அரைக்க:

  • 7 செத்தல் மிளகாய் 
  • 1 மே.க மல்லி
  • ½ மே.க சின்னச்சீரகம்
  • ½ மே.க பெருஞ்சீரகம்
  • ½ மே.க மிளகு
  • 5 கராம்பு
  • 3 ஏலக்காய் 
  • 1 இஞ் கறுவாப்பட்டை 

கறிக்கு:

  • 1 கிலோ ஆட்டிறைச்சி 
  • 2 கப் வெட்டிய வெங்காயம்
  • 1 கப் வெட்டிய தக்காளி
  • 2 மே.க இஞ்சி உள்ளி விழுது
  • 1 கப் தயிர்
  • ½ தே.க மஞ்சள் 
  • எண்ணை
  • உப்பு
  • பச்சை மிளகாய் 
  • மல்லிஇலை
  • தண்ணீர்

செய்முறை:

  1. ஒரு பாத்திரத்தில் செத்தல் மிளகாய், மல்லி, சின்னச்சீரகம், பெருஞ்சீரகம், மிளகு, கராம்பு, ஏலக்காய் மற்றும் கறுவாப்பட்டை ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, வறுத்து அரைக்கவும்.
  2. வெங்காயம் மற்றும் தக்காளியை மெல்லியதாக வெட்டி வைக்கவும். ஆட்டு இறைச்சியை ஓரளவு பெரிய துண்டாக வெட்டி வைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் எண்ணை விட்டு, மிதமான வெப்பத்தில் சூடாக்கவும். எண்ணை சூடானதும் அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் கலர் மாறும் போது ஆட்டு இறைச்சி, மஞ்சள், இஞ்சி உள்ளி விழுதுமற்றும் உப்புச் சேர்த்து, நன்றாகக் கலந்து வதக்கவும். அடுத்ததாக் தக்காளி சேர்த்து வதக்கி, மூடி அவிய விடவும். 
  4. ஆட்டு இறைச்சி தண்ணீர் விட்டு, அவிந்து, தண்ணீர் வற்றியதும், அரைத்து வைத்த மசாலை சேர்த்து கலந்து விடவும். அடுத்ததாக  தயிர் சேர்த்து, அதனுடன் தண்ணீர் சேர்த்து கலந்து, உப்பு சுவை பார்த்து, மூடி அவிய விடவும்.
  5. ஆட்டு இறைச்சிக் கறியில் இருந்து எண்ணை வெளிவந்து, உங்களுக்கு விரும்பிய பதம் பதம் வந்ததும், உங்களுக்கு விரும்பிய எண்ணிக்கையில் பச்சைமிளகாய் மற்றும் மல்லிஇலை சேர்த்து கலந்து, இரு நிமிடங்களின் பின்பு அடுப்பை அணைத்து விடவும்.
  6. சுடச்சுட மட்டன் கடாயை நாண் அல்லது பாண் அல்லது சோறு அல்லது உங்களுக்கு விருப்பமான உணவுடன் சேர்த்து பரிமாறவும்.

சுவையான மட்டன் கடாய் தயார்!








Comments