பாண்!

 


தேவையான பொருட்கள்:

  • 600 கிராம் மா
  • 7 கிராம் ஈஸ்ட்
  • 300 மி.லீ தண்ணீர்
  • 100 மி.லீ தயிர்
  • 3 மே.க எண்ணெய் 
  • 1 மே.க சீனி
  • உப்பு 
  • எள்ளு / கசகசா


செய்முறை: 

  1. முதலில் ஸ்ட் மற்றும் சீனியை  ஒரு பாத்திரத்திலிடவும். அதில் வெதுவெதுப்பாக தண்ணீர் விட்டு,  கலந்து 5- 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
  2. மற்றொரு பாத்திரத்தில் மா, உப்பு, தயிர், 2 மே.க எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, அதில் ஊற வைத்த ஈஸ்ட் கலவையை ஊற்றி, நன்கு மென்மையாக  சப்பாத்தி மாவு போல் குழைத்து, அதன் மேல் மீதியுள்ள எண்ணெயை பூசி விடவும். அதனை 45 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
  3. மா நன்கு ஊதி வரும். அதனை மீண்டும் ஒரு முறை பிசைந்து குழைத்து, 3  உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
  4. உருண்டையாக உருட்டி வைத்த மாவை 22 செ.மீ அளவுள்ள பேக்கிங் தட்டுகளில் வைத்து, சமப்படுத்தி விடவும் அல்லது பேக்கிங் தட்டில் பேக்கிங் பேப்பர் வைத்து ½ - 1 இஞ் உயரமாக, விரும்பிய வடிவில் உருட்டி விடவும்.பாண் மா இரண்டு மடங்காக ஊதி வரும் வரை பிளாஸ்டிக் பேப்பரால் அல்லது ஈரத்துணியால் மூடு வைக்கவும்.
  5. நன்றாக பாண் மா ஊதி வந்ததும், ஒவனை 225 °C இல் சூடேற்றவும்.
  6. அடுத்ததாக ஊதி வந்த பாண் மாவின் மேல் சிறிது தண்ணீர் பூசி, எள்ளு / கசகசா தூவி, சூடான ஒவனில் 12 -15 நிமிடங்கள் வேக விடவும்.
  7. பாண் பொன்னிறமாக வெந்ததும், அதனை ஒவனிலிருந்து வெளியில் எடுக்கவும். விரும்பினால் சூடான பாண் மேல் பட்டர் பூசி விடவும்.
  8. சுடச்சுட பாணை கறி வகைகளுடன் சேர்த்து பரிமாற சுவையா இருக்கும்.


சுவையான பாண் தயார்!


குறிப்பு:

  • தயிர் தவிர்த்து பாண் செய்ய விரும்பினால் 100 மி.லீ தண்ணீர் கூடுதலாகச் சேர்க்கவும், மற்றும் களித் தன்மையாக இருந்தால் 1 மே.க மாவை கூடுதலாகச் சேர்க்கவும். மாக்கலவை மென்மையாக இருந்தால் தான் பாண் மென்மையாக இருக்கும்.
  • இந்த அளவு மா, 22 செ.மீ அளவுள்ள 3 பேக்கிங் வட்ட தட்டுக்கு அல்லது 32 செ.மீ வட்ட அளவுள்ள 2 பேக்கிங் தட்டுக்கு போதுமானது.

  • பாணின் மேலே எள்ளு / கசகசா தூவாமலும் பாண் செய்யலாம்.
  • ஒவனுக்கு ஒவன் வெப்பநிலை மாறுபடுவதால், வேக வைக்கும் நேரமும் மாறுபடும்.













Comments