பட்டர் சிக்கன்!
தேவையான பொருட்கள்:
இறைச்சி ஊற வைக்க:
- 750 கிராம் கோழி இறைச்சி (எலும்பு இல்லாதது)
- 1 மே.க இஞ்சி உள்ளி விழுது
- 1 தே.க மிளகாய்த்தூள்
- ½ தே.க மஞ்சள்தூள்
- ½ மே.க தேசிப்புளி
- உப்பு
இறைச்சி பொரிக்க:
- பட்டர்
கறி மசாலா அரைக்க:
- 1 மே.க பட்டர்
- 5 ஏலக்காய்
- 5 த க்காளி
- 3 வெங்காயம்
- 1 இஞ் இஞ்சி
- 6 பல் உள்ளி
- 20 கயூ / பாதாம்*
- ½ கப் தண்ணீர்
கறி:
- 1 மே.க காஸ்மீரி மிளகாய்த்தூள்*(-/+)
- 1 தே.க கரம் மசாலா* (-/+)
- ½ தே.க மஞ்சள்தூள்* (-/+)
- 1 மே.க கஸ்தூரிமேதி* (-/+)
- சீனி
- உப்பு
- ½ கப் பட்டர் (-/+)
- ½ கப் பிறஸ் கிறீம் (-/+)
செய்முறை:
- எலும்பு இல்லாத கோழி இறைச்சியை, ஒரே அளவான துண்டுகளாக வெட்டி வைக்கவும். அதனுடன் இஞ்சி உள்ளி விழுது, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தேசிப்புளி மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து, குறைந்தது 30 நிமிடங்கள் ஊற வைக்கவும் அல்லது முதல் நாள் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து ஊற வைக்கவும்.
கறி மசாலா அரைக்க:
- ஒரு பாத்திரத்தை மிதமான தீயில் சூடேற்றவும். அதில் பட்டர் போட்டு, உருகியதும், அதில் ஏலக்காய் போடவும். அடுத்ததாக வெங்காயம், தக்காளி, இஞ்சி, உள்ளி மற்றும் கயூ / பாதாம் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி, அதனுடன் தண்ணீர் சேர்த்து நன்றாக அவிய விடவும். அதனை ஆறவிட்டு, அரைத்து வைக்கவும்.
இறைச்சி பொரிக்க:
- ஒரு பாத்திரத்தை மிதமான தீயில் சூடேற்றவும். அதில் பட்டர் போட்டு, உருகியதும், அதில் இறைச்சித் துண்டுகள் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
கறி:
- ஒரு பாத்திரத்தை மிதமான தீயில் சூடேற்றவும். அதில் பட்டர் போட்டு, உருகியதும், அதில் கரம் மசாலா, காஸ்மீரி மிளகாய்த்தூள் மற்றும் மஞ்சள்தூள் சேர்த்துக் கலந்து, அதனுடன் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கலந்து விடவும். அதனுடன் சீனி, ½ மே.க கஸ்தூரிமேதி மற்றும் உப்பு சேர்த்துக் கலந்து மூடி, கொதிக்க விடவும். மசாலாவில் எண்ணைத் தன்மை வெளி வரும் போது, பொரித்து வைத்த கோழி இறைச்சித் துண்டுகள் மற்றும் பிறஸ் கிறீம் சேர்த்துக் கலந்து விடவும். சுவை பார்த்து 5 - 10 நிமிடங்கள் சிறு தீயில் வேக விடவும். அடுத்ததாக மீதியாகவுள்ள கஸ்தூரிமேதியை தூவி கலந்து விடவும்.
- பட்டர் சிக்கன் நான் அல்லது பரோட்டா அல்லது சோற்றுடன் பரிமாற சுவையாக இருக்கும்.
சுவையான பட்டர் சிக்கன் தயார்!
குறிப்பு:
- மசாலா அரைக்கிற பட விளக்கத்தில் பதாம் சேர்த்துளேன். கயூ / முந்திரி சேர்த்தால் கிறீமியாக வரும்.
- கஸ்தூரி மேத்தி* என்றால் காய்ந்த வெந்தயக் கீரை.
- கரம் மசாலா* இல்லாவிட்டால் இறைச்சிச்சரக்குத்தூள் சேர்க்கவும்.
- காஸ்மீரி மிளகாய்த்தூள்* இல்லாவிட்டால் மிளகாய்த்தூள் சேர்க்கவும். காஸ்மீரி மிளகாய்த்தூளை கறியில் சேர்த்தால் நல்ல கலராகவும் உறைப்பு குறைவாகவும் இருக்கும்.
Comments
Post a Comment