நாண்!
தேவையான பொருட்கள்:
- 4 கப் மா
- 7 கிராம் ஈஸ்ட்
- 3 மே.க எண்ணெய்
- ½ கப் தயிர்
- 1 ¼ கப் தண்ணீர்
- 1 மே.க சீனி
- உப்பு
செய்முறை:
- முதலில் ஸ்ட் மற்றும் சீனியை ஒரு பாத்திரத்திலிடவும். அதில் வெதுவெதுப்பாக தண்ணீர் விட்டு, கலந்து 5- 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.
- மற்றொரு பாத்திரத்தில் மா, உப்பு, தயிர், 2 மே.க எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, அதில் ஊற வைத்த ஈஸ்ட் கலவையை ஊற்றி, நன்கு மென்மையாக சப்பாத்தி மாவு போல் குழைத்து, அதன் மேல் மீதியுள்ள எண்ணெயை பூசி விடவும். அதனை 1 அல்லது 2 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.
- மா நன்கு ஊதி வரும். அதனை மீண்டும் ஒரு முறை பிசைந்து குழைத்து, சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- மிதமான தீயில் தோசைக்கல்லை சூடாக்கவும்.
- உருண்டையாக உருட்டி வைத்த மாவை சப்பாத்தி போன்று உருட்டவும். அதனை சூடான தோசைக்கல்லில் போட்டு, வேக விடவும்.
- நாண் நன்கு ஊதி மேலே வரும் போது, மறுபக்கம் திருப்பி போட்டு, வேக வைத்து எடுக்கவும். அதன் மேல் பட்டர் பூசி விடவும்.
- நாணுடன் பட்டர் சிக்கன், ரிக்கா மசாலா, லம் கராகி , ஶ்ரீ லங்கன் இறைச்சி கறி வகைகள் அல்லது வட இந்திய கறி வகைகளுடன் சேர்த்து பரிமாற சுவையா இருக்கும்.
குறிப்பு:
- நாணில் பலவகை உண்டு ( கீம நாண், பெஸ்வாரி நாண் , பட்டர் நாண், உள்ளி நாண்)
1 கப் = 250 மி.லீ
1 கப் மா = 150 கிராம் மா
7 கிராம் ஈஸ்ட் = 2 ½ தே.க ஈஸ்ட்
Comments
Post a Comment