தாளித்த கொண்டைக்கடலை / கொண்டைக்கடலை சுண்டல்!


தேவையான பொருட்கள்:
  • 300 கிராம் கொண்டைக்கடலை 
  • உப்பு
  • தண்ணீர்
  • 2 மே.க தேங்காய் செட்டு

தாளிக்க:
  • ¼ கப் சின்ன வெங்காயம் (வெட்டியது)
  • 3 செத்தல் / காய்ந்த மிளகாய் 
  • 1 தே.க கடுகு 
  • 1½ தே.க சின்னச்சீரகம்
  • எண்ணெய்
  • கறிவேப்பிலை

  
செய்முறை:
  1. கொண்டைக்கடலையை தேவையான அளவு தண்ணீர் விட்டு,  முதல் நாள் இரவு ஊற வைக்கவும் அல்லது குறைந்தது 6 மணி நேரம் ஊற வைக்கவும். 
  2. ஒரு பாத்திரத்தில் கொண்டைக்கடலையை போட்டு, அவியத் தேவையான அளவு தண்ணீர் விட்டு அவிய விடவும். அரைப்பதம் அவிந்ததும் உப்பு சேர்த்து அவிய விடவும். 
  3. கொண்டைக்கடலை அவிந்ததும், தண்ணீரை வடித்து கொள்ளவும்.
  4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும், கடுகு போடவும். கடுகு வெடிக்க தொடங்கும் போது, சின்னச்சீரகம், வெங்காயம், செத்தல் / காய்ந்த மிளகாய்  மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
  5. தாளிதம் மற்றும் தேங்காய் செட்டுகளை அவித்த கொண்டைக்கடலையுடன் சேர்த்துக் கலக்கவும். 

சுவையான தாளித்த கொண்டைக்கடலை / கொண்டைக்கடலை சுண்டல் தயார்!









 

Comments