தேசிக்காய் தண்ணி!
தேவையான பொருட்கள்:
- 50 மி.லீ தேசிக்காய் சாறு (-/+)
- 800 மி.லீ தண்ணீர் (-/+)
- 100 கிராம் சீனி (-/+)
- 1 சிட்டிகை உப்பு(-)
- ஐஸ்கட்டிகள்
செய்முறை:
- குளிராக குடிக்க விரும்பினால் குளிர்சாதனப் பெட்டியில் சிறிது நேரம் தண்ணீரை வைக்கவும் அல்லது மண் பானையில் விட்டு வைத்த தண்ணீரைக் உபயேகிக்கவும். தேசிக்காயை வெட்டி, சாறு எடுத்து வைக்கவும்.
- ஒரு கிண்ணத்தில் அல்லது சட்டியில் சீனி மற்றும் உப்பைப் போட்டு, குளிர்ந்த தண்ணீரை விட்டு, சீனி நன்றாக கரையும் வரை கரைக்கவும்.
- அதன் பின்பு தேசிக்காய் சாறை விட்டு கலந்து விடவும். சுவை பார்க்கவும் (உங்கள் சுவைக்கேற்ப தேசிக்காய் சாறு, தண்ணீர் மற்றும் சீனியின் அளவை கூட்டக் குறைக்கவும்).
- விரும்பினால் பரிமாறும் கப்பில் ஒரு சில ஐஸ் கட்டிகளைப் போட்டு, தேசிக்காய்த் தண்ணியை விட்டு பரிமாறவும்.
தேசிக்காய்த் தண்ணி தயார்!!!
Comments
Post a Comment