சீமை சுரைக்காய் பால்க்கறி / வெள்ளைக்கறி!
தேவையான பொருட்கள்:
- 2 சீமை சுரைக்காய்
- 1 வெங்காயம்
- 3 பச்சைமிளகாய்
- ¾ தே.க மஞ்சள் தூள்
- ½ கப் தேங்காய்ப்பால்
- தண்ணீர்*
- இறால் / மாசிக்கருவாடு
- உப்பு
- தேசிப்புளி
- கறிவேப்பிலை
செய்முறை:
- சீமை சுரைக்காய் தோலை நீக்கி, சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் வெட்டிய சீமை சுரைக்காய், வெங்காயம், பச்சைமிளகாய் உப்பு, மஞ்சள் மற்றும் இறால் போட்டு, அவிய தேவையான தண்ணீர் விட்டு , மூடி அவிய விடவும்.
- சீமை சுரைக்காய் நன்றாக அவிந்ததும், சீமை சுரைக்காயை கரண்டியால் மசித்து, தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து, உப்பு சுவை பார்த்து அவிய விடவும். ஒரு கொதி வந்த பின்பு அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.
- சீமை சுரைக்காய் பால்க்கறி / வெள்ளைக்கறி ஆறியதும், தேசிப்புளி சேர்த்துக் கலக்கவும். சோற்றுடன் பரிமாற சுவையாக இருக்கும்.
சீமை சுரைக்காய் பால்க்கறி / வெள்ளைக்கறி தயார்!
குறிப்பு:
- சீமை சுரைக்காய் பால்க்கறி / வெள்ளைக்கறி சைவமாக சமைக்கும் போது, தாளித்து சேர்க்க வேண்டும்.
- உங்கள் சுவைக்கேற்ப பொருட்களின் அளவை, கூட்டிக் குறைக்கவும்.
Comments
Post a Comment