பீட்ரூட் வறை / பொரியல்!
தேவையான பொருட்கள்:
- 500 கிராம் பீட்ரூட்
- 1 வெங்காயம்
- ½ தே.க கடுகு
- 1 தே.க சின்னச்சீரகம்
- 2 மே.க கடலைப்பருப்பு / உளுந்து
- 3 செத்தல் / காய்ந்த மிளகாய்
- 2 பச்சை மிளகாய் (-)
- 1 தே.க மிளகு தூள்
- ½ தே.க சீரகத் தூள்
- ½ கப் தேங்காய்பூ
- கறிவேப்பிலை
- உப்பு
- எண்ணெய்
செய்முறை:
- பீட்ரூட்டை தோல் நீக்கி, சீவி வைக்கவும்.
- ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் கடுகு போட வேண்டும். கடுகு வெடிக்க தொடங்கும் போது, அதனுடன் கடலைப் பருப்பு, செத்தல், சின்னச்சீரகம், வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
- வெங்காயம் பொன்னிறமானதும், அதனுடன் சீவிய பீட்ரூட் மற்றும் உப்பு போட்டு வதக்க வேண்டும், (விரும்பினால் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்). தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளவும்.
- பீட்ரூட் வெந்ததும், அதனுடன் மிளகு தூள், சீரகத்தூள் மற்றும் தேங்காய்ப்பூ சேர்த்து, உப்பு சுவை பார்த்து, பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். சுடச்சுட பரிமாறவும்.
பீட்ரூட் வறை / பொரியல் தயார்!!!
Comments
Post a Comment