ப்ருட் கஸ்டட் / சலாட்!



தேவையான பொருட்கள்:
கஸ்டட் பால்:
  • 500 மி.லீ பால்
  • 3 மே.க சீனி
  • 2 - 3 மே.க கஸ்டட் பவுடர்*
  • 3 மே.க பால்

ப்ருட் சலாட்:
  • 15 முந்திரியப்பழம்
  • 2 கிவி
  • 1 மாம்பழம்
  • 1 அப்பிள்
  • 1 தோடம்பழம்
  • 5 பாலாப்பழ சுளைகள்

அலங்கரிக்க:
  • ஸ்ரோபெரி 
  • மாதுளம்பழம் / கயூ

செய்முறை:
  1. ஒரு பாத்திரத்தில் 500 மி.லீ பாலை மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
  2. ஒரு கிண்ணத்தில் கஸ்டட் பவுடர் மற்றும் 3 மேசைக்கரண்டி பாலை சேர்த்து நன்றாக கலக்கவும்.
  3. கொதித்த பாலுடன் கஸ்டட் கலவை சேர்த்து, அதனுடன் சீனியையும் சேர்த்து நன்றாக கலந்து, கை விடாமல் இறுகி வரும் வரை கிண்டி, அடுப்பில் இருந்து இறக்கி ஆற விட்டவும்.
  4. ப்ருட் சலாட் பழங்களை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும்.
  5. ஆறிய கஸ்ட் பால் கலவையுடன் வெட்டிய பழங்களை சேர்த்துக் கலந்து, மாதுளம்பழ முத்துக்கள் தூவி, மூடி குளிர்சாதனப்பெட்டியில் குறைந்தது 2 மணித்தியாலங்கள் வைக்கவும்.
  6. ப்ருட் சலாட் குளிர்ந்து இறுகியதும், பரிமாறும் கிண்ணங்களில் ப்ருட் சலாடை விட்டு மாதுளம்பழ முத்துக்கள் / கயூ / தூவி அல்லது ஸ்ரோபெரி பழத்மால் அலங்கரித்து பரிமாறவும். விரும்பினால் ஐஸ்கிறீம் அல்லது விப்பிங் கிறீமுடன் சேர்த்தும் பரிமாறலாம்.
ப்ருட் கஸ்டட் / சலாட்!

குறிப்பு: 
  • 2 மே.க கஸ்டட் பவுடர் போதுமானது. பழங்கள் சேர்த்து கலந்த பின்பு, சிறிது தண்ணித தன்மையாக வரும். இறுக்கமாக வேண்டும் என்றால் 3 மே.க கஸ்டட் பவுடர் சேர்க்கவும். 
  • 3 மேசைக்கரண்டி அவித்த சவ்வரிசி சேர்த்துக் கலந்தும் ப்ருட் சலாட் செய்யலாம்.
  • சிறு சிறு கிண்ணங்களில் ப்ருட் சலாட் விட்டு அதன் மேல் ஜெலி விட்டும் செய்யலாம். இதை ப்ருட் டெசேட் என்று சொல்வார்கள். ( இந்த முறைக்கு கயூ அரைத்து சேர்க்க வேண்டும்)
  • மாம்பழகூழ் சேர்த்தும் ப்ருட் சலாட் செய்யலாம்.















Comments