மீன் குழம்பு!




தேவையான பொருட்கள்:
  • 1/2 கிலோ மீன்
  • 3 கொரக்கா புளி
  • 1 துண்டு பாரைக்கருவாடு
  • 1 வெங்காயம் 
  • ½ தே.க கடுகு
  • ½ தே.க பெருஞ்சீரகம்
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • தண்ணீர்
  • எண்ணை

அரைப்பதற்கு:
  • 4 மே.க தேங்காய்ப்பூ (-/+)
  • 3 மே.க கறித்தூள் (-/+)
  • 5 பல் உள்ளி (-/+)
  • 2 தே.க மிளகு
  • ¼ - ½ தே.க மஞ்சள் (-/+)
  • ½ தே.க பெருஞ்சீரகம்
  • 1 தே.க சின்னச்சீரகம்
  • தண்ணீர்

செய்முறை:
  1. மீனை சுத்தம் செய்து, உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும். அரைப்பதற்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிருதுவாக அரைத்து வைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் எண்ணை விட்டு சூடேற்றவும். எண்ணை சூடானதும், கடுகைப் போடவும். கடுகு வெடிக்கும் போது, வெங்காயம், பெருஞ்சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். 
  3. வெங்காயம் கலர் மாறும் போது அரைத்து வைத்த மசாலா கலவை, தண்ணீர், கொரக்கா புளி மற்றும் கருவாடு சேர்த்துக் கலந்து கொதிக்க / அவிய விடவும். 
  4. ஒரு கொதி வந்ததும்,  மீனைப் போட்டுக் கலந்து, பாத்திரத்தை மூடி, கொதிக்க / அவிய விடவும். 
  5. எண்ணை வெளி வரும் வரை, மீன் கறியை கொதிக்க / அவிய விடவும். அடுப்பை அனைப்பதற்று முன்பு சிறிது கறிவேப்பிலையை பிய்த்துப் போடவும். சுடச்சுட பரிமாறவும்.

          மீன் குழம்பு தயார்!!!







          Comments