தர்பூசணி சர்பத்!
தேவையான பொருட்கள்:
- 300 கிராம் தர்பூசணி
- 2 கப் பால்
- 2 மே.க ரோஸ் சிறப்
- 1 - 2 மே.க சீனி / ரின் பால்
- 1 தே.க கசகசா
- 3 மே.க தண்ணீர்
செய்முறை:
- பாலைக் காய்ச்சி, ஆற விட்டு, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
- 1 தே.க கசகசாவை 3 மே.க தண்ணீரில் ஊற வைக்கவும்.
- ஒரு கிண்ணத்தில் குளிர்ந்த பால், ரோஸ் சிறப் மற்றும் சீனி / ரின் பால் சேர்த்து, நன்றாக கலக்கவும்.
- அடுத்ததாக தர்பூசணியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி சர்பத் கலவைக்குள் போட்டு, நன்றாக கலக்கவும்.
- சர்பத் கலவையினுள் ஊறிய கசகசாவைப் போட்டுக் கலந்து விடவும் அல்லது பரிமாறும் கப்பில் சிறிது ஊறிய கசகசாவைப் போட்டு, சர்பத் கலவையை விடவும். விரும்பினால் தர்பூசணிச் துண்டு கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
தர்பூசணி சர்பத் தயார்!
குறிப்பு:
- விரும்பினால் ஐஸ் கட்டிகள் சேர்க்கவும்.
- உங்கள் சுவைகேற்ப பொருட்களின் அளவை சூட்டிக் குறைக்கவும்.
Comments
Post a Comment