பிஸ்கட் டெசேட் / புடிங்!
தேவையான பொருட்கள்:
- 3 முட்டை
- 3 மே.க சீனி
- 300 மி.லீ விப்பிங் கிறீம்
- 1 பைக்கட் பிஸ்கட்
- 1 மே.க நெஸ் கோப்புத்தூள்(+/-)
- 3 மே.க சுடுதண்ணீர்
- கொக்கோ
- 1 கப் நெஸ் கோப்பு (பிஸ்கட் தோய்ப்பதற்கு)
செய்முறை:
- நெஸ் கோப்புத்தூளுடன் சுட தண்ணீர் சேர்த்துக் கலந்து, ஆற விடவும்.
- விப்பிங் கிறீமை, கிறீமாக அடித்து, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
- முட்டை மற்றும் சீனியை ஒன்றாகச் சேர்த்து நுரை பொங்க அடித்து, அதனுடன் விப்பிங் கிறீம் மற்றும் கோப்பி சேர்த்துக் கலக்கவும்.
- நெஸ் கோப்பியில் பிஸ்கட்டை தோய்த்து, டெசேட் / புடிங் செய்யும் பாத்திரத்தில் அடுக்கவும். அடுத்ததாக பிஸ்கட்டின் மேல் சிறிது டெசேட் / புடிங் கலவையை விட்டு, சமப்படுத்தி விடவும். இதன் மாதிரியே தொடர்ந்து செய்யவும் ( பிஸ்கட்டில் தொடங்கி டெசேட் / புடிங் கலவையில் முடிக்கவும்).
- டெசேட் / புடிங் கலவையிலன் மேல் சிறிது கொக்கோ / சொக்லேட் தூள் தூவி, குளிர்சாதனப் பெட்டியில் குறைத்தது 5 மணித்தியாளங்கள் வைக்கவும். பரிமாறும் போது விப்பிங் கிறீமால் அலங்கரித்து பரிமாறவும்.
பிஸ்கட் டெசேட் / புடிங் தயார்!!!
Comments
Post a Comment