ஈரப்பலாக்காய் பால்க்கறி!





தேவையான பொருட்கள்:
  • 1 ஈரப்பலாக்காய்
  • 20 சின்ன இறால்
  • 1 வெங்காயம்
  • 3 பச்சைமிளகாய்
  • 5 பல் உள்ளி
  • 1 தே.க மஞ்சள் தூள்
  • ½ தே.க மிளகுதூள்
  • ½ - 1 மே.க மிளகுதூள்
  • கருவேப்பிலை
  • உப்பு
  • 1 கப் தேங்காய்ப் பால்
  • ½ தேசிக்காய்

தாளிதம்:
  • 1 தே.க கடுகு 
  • ½ தே.க பெருஞ்சீரகம்
  • ½ வெங்காயம்
  • 3 செத்தல் மிளகாய்
  • கறிவேப்பிலை
  • எண்ணை

செய்முறை:
  1. இறாலின் தோலை நீக்கி, சுத்தம் செய்து வைக்கவும். ஈரப்பலாக்காயின் தோல் மற்றும் நடுவில் உள்ள தண்டு ஆகியவற்றை நீக்கி, துண்டுகளாக வெட்டவும். வெட்டிய ஈரப்பலாக்காய்த் துண்டுகளை பாத்திரத்தில் போட்டவும். அதன் மேல் சிறிது உப்புத் தூவி, தண்ணீர் விட்டு நன்றாகக் கழுவவும்.
  2. ஒரு பாத்திரத்தில் கழுவிய ஈரப்பலாக்காய்த்துண்டுகள், வெங்காயம், பச்சைமிளகாய், இறால், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அவிய விடவும். ஈரப்பலாக்காய் நன்கு அவிந்த பின்பு, குத்திய உள்ளி, மிளகுதூள், கறிவேப்பிலை, வெட்டுத்தூள் மற்றும் தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்து, உப்பு சுவை பார்த்துக் கொதிக்க விடவும். ஒரு கொதி வந்த பின்பு அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.
  3. ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணை விட்டு சூடாக்கவும். எண்ணை சூடானதும், அதில் கடுகு போடவும். கடுகு வெடிக்கும் போது, பெருஞ்சீரகம், வெங்காயம், செத்தல் மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து, வெங்காயம் கலர் மாறும் வரை வதக்கவும்.
  4. ஈரப்பலாக்காய் கறி ஆறியதும், தேசிப்புளி மற்றும் தாளிதம் சேர்த்துக் கலக்கவும். சோற்றுடன் பரிமாற சுவையாக இருக்கும்.

ஈரப்பலாக்காய் பால்க்கறி தயார்!!!







Comments