மரவள்ளிக்கிழங்கு வெள்ளைக்கறி / பால்க்கறி!


தேவையான பொருட்கள்:
  • 250 கிராம் மரவள்ளிக்கிழங்கு
  • 150 கிராம் பூசணிக்காய்
  • 5 பெரிய இறால்
  • ½ வெங்காயம்
  • 3 பச்சைமிளகாய்
  • கருவேப்பிலை
  • ¼ - ½ தே.க மஞ்சள் தூள்
  • உப்பு
  • 1/2 கப் தேங்காய்ப்பால் (-/+) 
  • தண்ணீர்

செய்முறை:
  1. ஒரு பாத்திரத்தில் மரவள்ளிக்கிழங்கு, பூசணிக்காய், வெங்காயம், பச்சைமிளகாய், மஞ்சள், இறால் மற்றும் தண்ணீர் விட்டு, மூடி அவிய விடவும்.
  2. மரவள்ளிக்கிழங்கு நன்றாக அவிந்ததும், மரவள்ளிக்கிழங்கு மற்றும் பூசணிக்காயை கரண்டியால் ஓரளவு மசித்து விடவும். அதன் பின்பு தேங்காய்பால், தேவையான அளவு உப்பு மற்றும் கருவேப்பிலையை பிய்த்துப் போட்டுக் கலந்து விடவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும். 
  3. சுடச் சுட சோறு மற்றும் மீன் குழம்புடன் சேர்த்து பரிமாற சுவையாக இருக்கும்.

மரவள்ளிக்கிழங்கு வெள்ளைக்கறி / பால்க்கறி தயார்!







Comments